பக்கம் எண் :

864யுத்த காண்டம் 

சரத்தினோடும்     வானிடைப்  புகுதி  அன்றே’  என்றான்  -
(சிறியதந்தையாகிய  உன்னைக்  கொல்லுதல்) பழி என்பதனை  மறுத்து
நின்னை  (அம்பினாற்)  கொல்லப்  புகின்  நீ   அந்த அம்பினோடும்
வானுலகத்தை அடைவாய் அல்லையோ? என்று கூறினான்.
 

தனது     யாகத்தை    அழிவித்தும்,      தனது    குலத்தைக்
காட்டிக்கொடுத்தும்         இலங்கை       அழிவிற்குத்தானுமொரு
காரணமாயிருக்கும்    வீடணன்   போர்   முகத்தில்   பகைவனோடு
நின்றுமுரண்பட்ட   நிலையிலும்   தந்தை   முறையாகும்  அவனைக்
கொல்லப்  பழிபார்க்கும்  இந்திரசித்தனின்  பண்பு நிலை பாராட்டுதற்
குரியது.
 

                                                 (170)
 

                                         வீடணன் மறுமொழி
 

9104.

அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
‘வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய!
இவ் உரை கேட்டி!’ என்னா, இனையன விளம்பலுற்றான்:
 

அவ்வுரை அமையக்கேட்ட வீடணன் - (இந்திரசித்து கூறிய) அந்த
வார்த்தையினை    (மனம்)   பொருந்தக்கேட்ட  வீடணன்;  அலங்கல்
மோலி  செவ்விதின்  துளக்கி
 -  மாலையணிந்த  முடியினை  நன்கு
அசைத்து;  மூரல்  முறுவலும்  தெரிவது ஆக்கி - (தன்முகத்தே) புன்
சிரிப்பு  வெளிப்படச்செய்து;  ‘ஐய!  வெவ்விது பாவம் சாலத்தருமமே
விழுமிது
 -  ‘ஐயனே!   பாவம்  கொடுமையுடையது  அறமே  மிகவும்
சிறந்தது;  ‘இவ்வுரை  கேட்டி!’  என்னா இனையன விளம்பலுற்றான்
- (யான்  கூறும்)  ‘இம்மொழியினைக்  கேட்பாயாக’  என்று (பின்வரும்)
இம்மொழிகளைக் கூறத் தொடங்கினான்.
 

                                                 (171)
 

9105.

‘அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;