| துறந்திலேன் மெய்ம்மை, எய்தும் பொய்ம்மையே துறப்பது அல்லால்; பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன், பிழைத்த போதே. |
அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும் - அறமே துணையாவது (அவ் அறத்தை) அன்றி(க்கடப்பதற்கு) அரிய நரகத்தினைப் பொருந்தும்படி தரும்; மறம்துணையாக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் - பாவத்தினைத்துணையாகக்கொண்டு நீங்காத பழியோடும் உயிர் வாழ மாட்டேன்; எய்தும் பொய்மையே துறப்பது அல்லால் மெய்மை துறந்திலேன் - (இடையில்) வந்து அடையும் பொய்ம்மையினை விட்டு ஒழிப்பதல்லது மெய்மையினை விட்டு நீங்கினேன் அல்லேன்; இலங்கைவேந்தன் பிழைத்த போதே அவன் பின் பிறந்திலேன் - இலங்கை வேந்தனாகிய இராவணன் (பிறனில் விழைதலாகிய) பிழையினைச் செய்த பொழுதே அவன் பின் பிறவாதவன் ஆயினேன். |
(172) |
9106. | ‘உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும் கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே? பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? |
நறவம் உண்டிலென்; பொய்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும் கொண்டிலென் - (யான்) மதுவினை உண்டிலேன்; பொய்ம்மொழி உரைத்திலேன்; (பிறர்க்குரிய பொருள்களுள்) ஒன்றையும் வலிதிற்கவர்ந்து கொண்டிலேன்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் கண்டிலர் என்பால் - (எவர்க்கும்) மாயத்தினாற் செய்யும் வஞ்சனைச் செயலை(மனத்தாற்) குறித்திலேன். என்பால் யாரும் குற்றத்தினைக் கண்டிலர்; நீயிரும் காண்டிர் அன்றே? உண்டே? - நீங்களும் என்னை நன்கு அறிந்திருக்கிறீர்களல்லவா? என்பால் ஏதேனும் குற்றம் உளதோ?; பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? - |