கற்புடைய பெண்டிரிடத்து முறைதவறி நடந்தவரை (யான்) விட்டு நீங்கியது தவறுடைய செயலாகுமோ? |
(173) |
9107. | ‘“மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை நோவன செய்தல் தீது” என்று உரைப்ப, நுன் தாதை சீறி, “போ!” எனப் போந்தேன்; இன்று நரகதில் பொருந்துவேனோ? |
மூவகை உலகும் ஏத்தும் முதலவன் - ‘மூன்று வகை உலகங்களும் துதித்துப் போற்றும் முதல்வனும்; எவர்க்கும் மூத்ததேவர்தம் தேவன் தேவி - எல்லார்க்கும் முன்னே தோன்றி மூத்ததேவாதி தேவனும் ஆகிய திருமாலின் மனைவி; கற்பினில் சிறந்துளாளை’ நோவனசெய்தல் தீது - கற்பினில் சிறந்துள்ளவளாகிய பிராட்டியை மனம் நொந்து வருந்தத்தக்கன செய்தல் பாவம்; என்று உரைப்ப நுன்தாதை சீறிப் “போ”! எனப்போந்தேன் - என்று (யான்) சொல்ல, உன்தந்தை (என்னை) வெகுண்டு, ‘ஓடிப்போ’ என்று கூற (அவனை விட்டு) வந்தேன்; இன்று நரகதில் பொருந்து வேனோ - இப்பொழுது நரகத்திற் புகுவேனோ? |
(174) |
9108. | ‘வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும் உம்மையே புகழும் பூண்க; துறக்கமும் உமக்கே ஆக; செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும் எம்மையே பழியும் பூண்க; நரகமும் எமக்கே ஆக. |
வெம்மையின் தருமம் நோக்காவேட்டதே வேட்டு வீயும் - கொடுமைகாரணமாக அறத்தை நோக்காது (மனம்) விரும்பியதனையே விரும்பிக்கெட்டொழியும்; உம்மையே புகழும் பூண்க துறக்கமும் உமக்கே ஆக - உங்களையே புகழும் (அணியாகப் பொருந்துக. துறக்கவுலக இன்பமும் உங்களுக்கே உரியதாகுக; செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும் - செவ்விதாகிய பண்பினைப் பொருந்தி மேன்மையுடையோர் கொண்டொழுகிய ஒழுக்கத்தோடு அறத்தினைத் தெளிந் |