9109. | ‘”அறத்தினைப் பாவம் வெல்லாது” என்னும் அது அறிந்து, “ஞானத் திறத்தினும் உறும்” என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்; புறத்தினில் புகழே ஆக; பழியொடும் புணர்க; போகச் சிறப்பு இனிப் பெறுக; தீர்க’ என்றனன், சீற்றம் தீர்ந்தான். |
9110. | ‘பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறை முகப் பகழி பெற்றால், இறும் சிறப்பு அல்லால், அப் பால் எங்கு இனிப் போவது?’ என்னா, தெறுஞ் சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து, செம் பொன் உறும் சுடர்க் கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன். |