பிறைமுகப் பகழி பெற்றால் - (வீடணனை நோக்கி) ‘நீ பெறக்கருதியுள்ள சிறப்புக்கள் யாவும் என்கையிலுள்ள பிறைமுக அம்பு ஒன்றினைப் பெற்றால்; இறும் சிறப்பு அல்லால் எங்கு இனிப் போவது?’ என்னா - அழிந்தொழியும் சிறப்பாய் முடிவதன்றி (அழியாது) இனி அப்பால் செல்வது எங்கே? என்று சொல்லி; தெறுஞ்சிரைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து - (பாம்பினை) அழிக்கும் சிறகினை உடைய கருடனை ஒத்ததாகிய ஓர் அம்பினைத் தெரிந்தெடுத்து; செம்பொன் உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் - செம்பொன் அணிகள் பொருந்திய ஒளியினை உடைய (வீடணனது) கழுத்தை நோக்கிச் செலுத்தினான். | (177) | 9111. | அக் கணை அசனி என்ன, அன்று என, ஆலம் உண்ட முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி, ‘இக் கணத்து இற்றான், இற்றான்’ என்கின்ற இமையோர்காண, கைக் கணை ஒன்றால், வள்ளல், அக் கணை கண்டம் கண்டான். | அக்கணை அசனி என்ன அன்று என - (இந்திரசித்து ஏவிய) அந்த அம்பானது, இடி எனவும், தீ எனவும்; ஆலம் உண்ட முக்கணான்சூலம் என்ன - நஞ்சினை உண்ட மூன்று கண்களை உடைய சிவபெருமானுடைய சூலப்படை எனவும்; முடுகிய முடிவை நோக்கி - விரைந்து செல்லுதலால் நேரும் முடிவினை எண்ணிப்பார்த்து; ‘இக்கணத்து இற்றான், இற்றான்’ என்கின்ற இமையோர் காண - ‘(வீடணன்) இப்பொழுதே இறந்தான் இறந்தான்’ எனத் தம் முட் கூறுகின்ற தேவர்கள் காண; வள்ளல் கைக்கணை ஒன்றால் அக்கணை கண்டம் கண்டான் - வள்ளல் தன்மை உடையோனாகிய இலக்குவன், தன்கையிற் கொண்ட அம்பு ஒன்றினால் (இந்திரசித்துவிட்ட) அந்த அம்பினைத் துண்டித்து முறித்தான். | (178) | 9112. | கோல் ஒன்ற துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான், வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன, |
|
|
|