பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 869

நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரி விலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான்.
 

கூற்றுக்கும்  கூற்றம் அன்னான் கோல் ஒன்றுதுணிதலோடும் -
கூற்றுவனுக்கும்  கூற்றுவனாகிய    இந்திரசித்து  (வீடணன் மேல் தான்
ஏவிய)  ஒப்பற்ற  அம்புதுண்டிக்கப்பட்டவுடனே; வேல் ஒன்று வாங்கி
விட்டான்
  -  வேற்படை   ஒன்றை  எடுத்து  (அவ்வீடணன்  மேல்)
விட்டான்; வெயில்   ஒன்று   விழுவது   என்ன  -  அந்நிலையில்
சூரியனாகிய   சுடந்  ஒன்று  விழுவது  என்னும்படி;  நால்  ஒன்றும்
மூன்றும் ஆன புவனங்கள்  நடுங்கலோடும்
 -  ஏழு  உலகங்களும்
நடுக்கமுறுதலும்;  நூல் ஒன்று  வரிவிலானும்  அதனையும்  நுறுக்கி
வீழ்த்தான்
   -   வில்வேத   முறைப்படி   கட்டமைந்த  வில்லினை
உடையவனாகிய    இலக்குவனும்  அவ்வேற்படையையும்  பொடியாக்கி
வீழ்த்தினான்.
 

                                                 (179)
 

9113.

‘வேல்கொடு கொல்லல் உற்றான்’ என்று, ஒரு வெகுளி 
                                       பொங்க,

கால்கொடு காலின் கூடிக் கை தொடர் கனகத் தண்டால்,
கோல் கொளும் ஒருவனோடும், கொடித் தடந் தேரில் 
                                         பூண்ட

பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான், துடிப்பு மாற.
 

‘வேல்   கொடு    கொல்லல்  உற்றான்’ என்று ஒரு வெகுளி
பொங்க
- ‘(இந்திரசித்து    என்னும்     இவன்)    வேற்படையினைக்
கொண்டு   (என்னைக்) கொல்லுதற்கு முற்பட்டான்’ என்று (தன்மனத்தே)
கோபம் கிளர்ந்து  எழ; கால்கொடு காலின் கூடிக்கை தொடர் கனகத்
தண்டால் 
-  காலினால்  காற்றினைப்  போன்று  (விரைந்து அவனை)
அடைந்து  (தன்) கையிற்பற்றிய பொன்மயமான தண்டாயுதத்தால்; கோல்
கொளும்  ஒருவனோடும்  கொடித்தடந்தேரில்  பூண்ட
 -  தாற்றுக்
கோலினைக்       கொண்ட      (தேர்ப்பாகனாகிய)     ஒருவனோடு
கொடியினையுடைய பெரிய   தேரிற்  பூட்டப்பட்டுள்ள;  பால்கொளும்
புரவி எல்லாம் படுத்தினான் துடிப்புமாற
- தொகுதியினைக் கொண்ட
குதிரைகள