பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 87

இரண்டாம்  வேற்றுமை   உருபும்   பயனும்  உடன்  தொக்க தொகை.
நுந்துவென் - தன்மை ஒருமை வினை முற்று. ஆல் - அசை.

                                                  (41)

7768.‘செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா,
இம்பர் நடவாதன, ஈகுவெனால்.

செம்பொன்னின்  அமைந்து சமைந்தன தேர் - செம்பொன்னால்
செய்யப்பட்டு  உறுதி  பொருந்திய தேர்களும்; உம்பர் நெடுவானினும்
ஒப்பு  உறழாப்
 -  மேல் உள்ள வானுலகத்திலும் ஒப்பும் மாறுபாடும்
இல்லாத;  பம்பும் மணிதார்  அணி  -  நிறைந்த  மணிகளால் ஆன
மாலைகளை  அணிந்து;   இம்பர்   நடவாதன   -   இவ்வுலகத்தில்
நடக்காதனவாகி;   பாய்பரிமா   -  பாய்ந்து  செல்லும்  குதிரைகளை;
ஈகுவெனால் - தருவேன்.

பம்புதல்     -  நிறைதல்,  இம்பர்  -  இவ்வுலகில்  சமைந்தன  -
முற்றெச்சம்.  பரிமா  -  இரு பெயரொட்டுப்  பண்புத்தொகை.  ஆல் -
அசை.

                                                  (42)

7769.‘நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்.

நிதியின் நிரை  குப்பை  நிறைத்தனவும்  -  நிதிகளின்  வரிசை
மிகுதியாக   நிறைந்து   வைத்தனவும்;   பொதியின்   மிளிர்   காசு
பொறுத்தனவும்
 -  மூட்டையாக ஒளிவிடுகிற மணிகள்  தாங்கியனவும்;
மதியின்  ஒளிர் தூசு  வகுத்தனவும்  -  நிலவு  போல்  ஒளிவிடுகிற
பட்டாடைகள்  வகை  வகையாக  வைக்கப்பட்டனவும்;  சகடு ஆயிரம்
அதிகம்   ஈகுவெனால்
  -   ஆகிய   வண்டிகள்   ஆயிரத்திற்கும்
அதிகமாகத் தருவேன்.

குப்பை -  மிகுதி,  தூசு  -  ஆடை,  வகுத்தல்  - வகை வகையாக
வைத்தல், சகடு - வண்டி.

                                                  (43)

7770.‘மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
உற்று உன் நினைவு யாவையும் உந்துவெனால்;