எல்லாவற்றையும் (அவற்றின் உயிர்த்) துடிப்பு நீங்கக் கொன்று வீழ்த்தினான் வீடணன். |
(180) |
9114. | அழிந்த தேர்மீது நின்றான், ஆயிர கோடி அம்பு பொழிந்து, அவன் தோளின்மேலும், இலக்குவன் புயத்தின்மேலும் ஒழிந்தவர் உரத்தின்மேலும், உதிர நீர் வாரி ஓதம் அழிந்து இழிந்து ஓட, நோக்கி, அண்டமும் இரிய ஆர்த்தான். |
அழிந்த தேர் மீது நின்றான் அவன் தோளின் மேலும் - அழிவுற்ற (அந்தத்) தேரின் மேல் நின்றவனாகிய இந்திரசித்து அவ்வீடணன் தோளின் மேலும் இலக்குவன் புயத்தின் மேலும் ஒழிந்தவர் உரத்தின் மேலும் - இலக்குவன் தோளின் மேலும் எஞ்சியுள்ள வானரவீரர் மார்பின் மேலும்; ஆயிரகோடி அம்புபொழிந்து உதிர நீர் வாரி ஓதம் - ஆயிர கோடி அளவினவாகிய அம்புகளைச் சொரிந்து குருதி நீராகிய பெருவெள்ளம்; அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் - வரம்பழிந்து இழிந்து ஓடக்கண்டு அண்டமும் நிலைகெட்டு ஓடும்படி பேராரவாரம் செய்தான். |
(181) |
இந்திரசித்து இராவணனிடம் போதல் |
9115. | ஆர்த்தவன், அனைய போழ்தின், ‘அழிவு இலாத் தேர் கொண்டுஅன்றிப் போர்த் தொழில் புரியலாகாது’ என்பது ஓர் பொருளை உன்னி, பார்த்தவர் இமையாமுன்னம், ‘விசும்பிடைப் படர்ந்தான்’ என்னும் வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு புக்கான். |
ஆர்த்தவன்; அனையபோழ்தின் ‘அழிவு இலாத்தேர்கொண்டு அன்றி - (அங்ஙனம்) ஆரவாரித்தவனாகிய இந்திரசித்து, அப்பொழுது அழிவுறாத தேரினைக் கொண்டல்லாமல்; போர்த்தொழில் புரியல் ஆகாது’ என்பது ஓர் பொருளை உன்னி - போர்த்தொழில் புரிதல் முடியாது என்பதொரு பொருளை |