(மனத்தில்) எண்ணி; பார்த்தவர் இமையாமுன்னம் ‘விசும்பிடைப் படர்ந்தான்’ என்னும் - தன்னை நோக்கியவர்கள் ‘கண் இமையினை மூடித்திறப்பதற்குள் ஆகாயத்தில் மறைந்து சென்றான் (இந்திரசித்து)’ என்னும்; வார்த்தையை நிறுத்திப் போனான் இராவணன் மருங்குபுக்கான் - சொல்லினை (ப்போர்க்களத்தில்) நிலைக்கச் செய்து (மறைந்து) சென்றவனாகி இராவணன் பக்கத்திற் புக்கான். |