பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 873

புண்ணுடை யாக்கைச் செந்நீர், இழிதர, புக்கு நின்ற
எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய 
                                சொன்னான்.

 

‘விண்ணிடைக்   கரந்தான்’ என்பார்; ’வஞ்சனை விளைக்கும்’
என்பார்
 -  ‘இந்திரசித்து விண்ணில்  மறைந்தான்’ என்பாரும், ‘இனி
வஞ்சனைச் செயலைச் செய்வான் என்பாருமாய்; கண்ணிடைக் கலக்க
நோக்கி  ஐயுறவு உழக்கும்   காலை
  -   வானரர்  கண்  கலங்கி
(விண்ணை) நோக்கி,    ஐயத்தால்   வருந்திக்  கொண்டிருக்கும்போது;
புண்ணுடை யாக்கைச்  செந்நீர் இழிதரப்புக்கு நின்ற- (விண்ணிடை
மறைந்து  நில்லாமல்)   புண்ணுடைய  தன்  உடம்பில் இரத்தம் சோர,
இராவணன்  இல்லம் புகுந்து  நின்ற; எண்ணுடை  மகனை  நோக்கி,
இராவணன் இனைய  சொன்னான்
- மதிப்புடைய மகனைப் பார்த்து
இராவணன் இத்தகைய வார்த்தைகளைச் சொன்னான்.
 

                                                   (1)
 

9117.

‘தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்,
                                  நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் 
                                         யாக்கை

நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி’ என்றான்.
 

தொடங்கிய     வேள்வி  முற்றுப் பெற்றிலாத் தொழில் - நீ
தொடங்கிய வேள்வி முற்றுப் பெறாத  தன்மையை; நின் தோள் மேல்
அடங்கிய     அம்பே   என்னை  அறிவித்தது
 -  நின்  தோள்
மேல்தைத்துள்ள அம்பே எனக்கு  அறிவித்தது; அழிவு  இல் யாக்கை
நடுங்கினை  போலச் சாலத் தளர்ந்தனை
- அழிவு இல்லாத உடம்பு
(முதுமையால்)    நடுங்கினவன்   போல    மிகவும் தளர்ந்து; கலுழன்
நண்ணப் படங்குறை அரவம்  ஒத்தாய்
 -  கருடன் நெருங்கியதால்
படம் ஒடுங்கின பாம்பு   போன்றோய்; உற்றது  பகர்தி  என்றான் -
நிகழ்ந்ததைச் சொல் என்று இராவணன் வினவினான்.
 

                                                   (2)
 

9118.

‘சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,