பக்கம் எண் :

874யுத்த காண்டம் 

ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில் 
                               தொடங்கி யார்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்;
                                  தடுத்து விட்டான்.
 

சூழ்வினை  மாயம் எல்லாம் உம்பியே துடைக்க - யான் செய்த
சூழ்ச்சியையும்    மாயையும் உன் தம்பி வீடணனே உண்மை சொல்லிப்
பயனிலதாக்கி   விட்டமையால்;   வேள்வியைச்    சிதைய   நூறி,
வெகுளியால் எழுந்து  வீங்கி
 -  (இலக்குவன்)  தன்  சேனையோடு
முற்றுகையிட்டு      வேள்வியைச்   சிதையுமாறு   அழித்து   விட்டுக்
கோபத்தால்   கிளர்ச்சியைப்   பெற்றுப்   பூரித்து  நிற்க; ஆள்வினை
ஆற்றல் தன்னால் அமர்த்தொழில்  தொடங்கி
  -  யானும் முயற்சி
மிக்க  வலிமையினால்  போர்த் தொழில் தொடங்கி; யார்க்கும் தாழ்வு
இலாப் படைகள்  மூன்றும்  தொடுத்தனன்  தடுத்து  விட்டான்
-
யார்க்கும்   தாழ்தலில்லாத  தெய்வப்  படைகள் மூன்றையும் தொடுத்து
விட்டேன் அவன் அவற்றைத் தடுத்து விட்டான்.
 

                                                   (3)
 

9119.

‘நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் 
                                படை நின்றானை
வலம் செய்து போயிற்று என்றால், மற்று இனி வலியது 
                                      உண்டோ?

குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் 
                                    கொண்டாய்;

சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், 
                                         தானே.

 

நெடிய     மால்     படை  நிலம் செய்து விசும்பும் செய்து,
நின்றானை
- யான்  எய்த  நெடிய  திருமாலின் படை நிலம் முழுதும்
பரவியதோடு   விண்  முழுதும்  பரவி என் எதிர் நின்ற இலக்குவனை;
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ?
- வலம் செய்து  கொண்டு     (அவனை     ஒன்றும்     செய்யாது)
போவது    என்றால், அப்படையினும்  வலியதொரு  படை  நம்மிடம்
உளதோ?    குலம்      செய்த    பாவத்தாலே  கொடும் பகை
தேடிக்கொண்டாய்
- நம்  அரக்கர்  குலம்  செய்த பாவத்தினாலே நீ
கொடுமையான   பகையைத்    தேடிக்கொண்டாய்; இலக்குவன் சலம்
செயின் தானே உலகம் மூன்றும்  முடிப்பன்
- இலக்குவன்