பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 875

வெகுள்வானாயின்     அவன்    ஒருவனே    உலகம்   மூன்றையும்
அழிப்பான்.
 

‘கெட்ட     பின்பு ஞானி ’ என்னுமாப் போலே, முன்பு இராவணன்
மந்திராலோசனை   முதலானவற்றுள்  இராம  இலக்குவரை அற்பமாகக்
கொண்டு     பேசிய     இறுமாப்புடைய    வீரனான    இந்திரசித்து
போர்க்களத்தில்      தனது    தவபலம், உடற்பலம், எல்லாவற்றிற்கும்
மேலாகத்  தனது    தெய்வப் படைகளின் பலம் ஆகியவை பொய்த்துப்
போனமையினால்     உண்மை   நிலை   தெளியப்  பெற்றுப்  பேசும்
பேச்சாமிது.
 

                                                   (4)
 

9120.

‘முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்.
 

முட்டிய   செருவில் முன்னம் முதலவன் படையை - நெருங்கிய
போரில்   முன்னம்  பிரமன்  படையை; உலகை  அஞ்சி  என்மேல்
விட்டிலன்
  -   உலகம்   அழியுமே   என்று  அஞ்சி  என்  மேல்
விட்டிலன்; ஆதலால்  வென்று   மீண்டேன்   -  ஆதலால்  (யான்
பிரமாத்திரம் விடுத்து  அவனை) வென்று மீண்டேன்; கிட்டிய போதும்
காத்தான்
 -   நிகும்பலையில்  வந்து நெருங்கிப் போர் செய்தபோதும்
அப்பிரமன்    படையை  என்  மீது  விடாமல்  யான்  விட்ட பிரமன்
படையை மட்டும் தடுத்தான்; இன்னமும் கிளர வல்லான் - இன்னமும்
ஆர்வங்கொண்டு போர் செய்தலில் வல்லவனாய்; சுட்டிய வலியினாலே
கோறலைத் துணிந்து நின்றான்
- (உலகவரால்) சுட்டி உரைக்கப்பெறும்
தன்   வில்வலிமையினாலேயே   என்னைக்  கொல்லுதலைத்  துணிந்து
நின்றுள்ளான்.
 

                                                   (5)
 

9124.

‘ஆதலால், “அஞ்சினேன்“ என்று அருளலை; ஆசைதான் 
                                           அச்

சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்; 
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்’ என்றான்-உலகு எலாம் கலக்கி 
                                      வென்றான்.