“அழிவு இலாத்தேர் கொண்டன்றிப் போர்த் தொழில் புரியலாகாது“ எனப் போர்க்களத்திலிருந்து புறப்பட்ட இந்திரசித்து அத்தகு தேரினை ஊர்ந்து போர்க்களம் போதலை விடுத்துத் தந்தையிடம் வந்து இங்ஙனம் பேசுவது ஏன்? இறுதியாக இலக்குவனுடன் நடந்த போரில் “அறம் வெல்லும், பாவம் தோற்கும்“ என்ற படிப்பினையை அவன் உணர்ந்தமையே. கும்பகர்ணன் முன்பே குறிப்பிட்ட (கும்பகர்ணவதை 84, 85) இந்த உண்மையை இவன் காலங் கடந்து உணருகின்றான். எனினும் இறுதியாகத் தந்தையிடம் சொல்ல வேண்டுவதைச் சொல்லிப் பார்க்கலாமே, என்ற எண்ணத்தினால் இங்ஙனம் வந்து கூறுகின்றான் என்க. |
9122. | இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு தோன்ற, புயங்களும் குலுங்க நக்கு, ‘போர்க்கு இனி ஒழிதி போலாம்; மயங்கினை; மனிசன்தன்னை அஞ்சினை; வருந்தல்; ஐய! சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே. |