தருவாய்     என்றோ,         எண்ணி   அன்று; என்னையே நோக்கியான் இந்நெடும்    பகை          தேடிக்கொண்டேன்   -   என்   வலிமையை எண்ணியேயான் இந்த நெடிய பகையைத் தேடிக்கொண்டேன்.    | 
                                                        (8)    | 
| 9124. | ‘பேதைமை      உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம்                                           பெயர, பேராக் காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண, மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது                                                 அல்லால், சீதையை விடுவது உண்டோ, இருபது திண் தோள்                                                உண்டால்?    | 
பிள்ளாய்!       பேதைமை  உரைத்தாய்  -  பிள்ளாய்!  அறிவோடு பொருந்தாத       சொற்களைச்   சொன்னாய்;   உலகு   எலாம்  பெயர பேராக்காதை        என்புகழினோடு  நிலைபெற - உலகங்கள் எல்லாம் நிலை      பெயரவும் அழியாத கதை எனது புகழினோடு நிலை பெறுமாறும்; அமரர்      காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்       -  அதனைத்  தேவர்கள் காணுமாறும், நீர்மேல் எழுகின்ற குமிழி  போன்ற  நிலையில்லாத  உடம்பை விடுவது      அல்லது; இருபது திண் தோள் உண்டால் சீதையை      விடுவது  உண்டோ?  - இருபது திண்ணிய தோள்கள் எனக்கு இருக்கச் சீதையை விடுவதும் உண்டோ?    | 
                                                        (9)    | 
| 9125.  | ‘வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும் யானும்  நின்றுனென் அன்றோ,மற்று அவ் இராமன் பேர்                                                 நிற்கும்ஆயின்? பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து                                                      அன்றோ? இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?    | 
வென்றிலன்      என்ற போதும் - யான் வெற்றி பெறவில்லையாயினும்; மற்று      அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் - (வெற்றி பெற்ற) அந்த இராமன்      பேர்  நிற்குமாயின்;  யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன் அன்றோ        - (அவனால்)  வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றுள்ளேன்  |