பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 881

         இராவணனைத் தடுத்து இந்திரசித்துப் போர்க்குச் செல்லுதல்
 

9128.

எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி 
                               இறைஞ்சி, ‘எந்தாய்!

ஒழிந்தருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான் 
                                         போய்க்

கழிந்தனென் என்ற பின்னர், நல்லவா காண்டி’ என்னா
மொழிந்து, தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான்.
 

எழுந்தவன்  தன்னை   நோக்கி    இணை அடி இறைஞ்சி -
அவ்வாறு போர்க்கு   எழுந்த  இராவணனைப்  பார்த்து  அவனுடைய
இரண்டு அடிகளையும்   வணங்கி,;   ‘எந்தாய்! சீற்றம்  ஒழிந்தருள்,
சொன்ன  உறுதியைப்  பொறுத்தி
 -  ‘என்  தந்தையே! கோபத்தை
விடுவாயாக!  யான்   சொன்ன  உறுதிச்சொற்களைப்  பற்றி  என்மேல்
வெகுளாது பொறுத்துக்  கொள்வாயாக;  யான் போய்க் கழிந்தனென்
என்ற பின்னர் ‘நல்லவா   காண்டி’ என்னா
-   யான்  போர்க்குச்
சென்று இறந்தேன் என்று  கேள்விப்பட்ட   பின்பு  என்   சொற்களை
‘நல்லனவாகக்    காணுவாய்’    என்று  கூறிவிட்டு; மொழிந்து,  தன்
தெய்வத்  தேர்   மேல்    முடியலுற்றான்  ஏறினான்
-   தனது
தெய்வத்தன்மையுடைய   தேரின்மேல் இறக்கும் உறுதி கொண்டவனாய்
ஏறினான் (இந்திரசித்து).
 

                                                  (13)
 

9129.

படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன, தேர்மேல் ஆக்கி,
கொடைத் தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன்,
                             கொடியோன் தன்னைக்
கடைக்கணால் நோக்கி நோக்கி, இரு கண் நீர் கலுழப் 
                                        போனான்.

 

படைக்கல    விஞ்சை   மற்றும்   படைத்தன   பலவும்   -
படைக்கலங்களைச்    செலுத்தக்  கூடிய  மறை பொருளாகத் தனக்குத்
தெரிந்த    வித்தைகளும்   மற்றும்   போர்த்துறைக்குரிய  வகையான
ஆயுதங்களையும்; தன்பால் அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன