பக்கம் எண் :

882யுத்த காண்டம் 

தேர்மேல்    ஆக்கி - தன்னிடத்து அடைக்கலப் பொருள்களாக சிவ
பொருமான்  அன்புடன் அளித்தனவுமான பொருள்களைத்   தேர்மேல்
வைத்து;  கொடைத்தொழில் வேட்டார்க்கு எல்லாம் கொடுத்தனன்
- தான்  கொடுக்கும்   தொழிலிலே   விரும்பியவர்களுக்கு  (விரும்பிய
வண்ணம்   மீதமின்றி) அனைத்தையும் கொடுத்தனனாகி; கொடியோன்
தன்னை
 -  கொடுமை வாய்ந்தவனாகிய இராவணனை; கடைக்கணால்
நோக்கி    நோக்கி     இரு  கண் நீர் கலுழப் போனான்
- தன்
கண்களின்  ஓரங்களினால்  அடிக்கடி பார்த்து இரண்டு கண்களினின்றும்
கண்ணீர் சிந்தப் போர் மீது சென்றான்.
 

முன்பு     பிற உயிர்க்குத் துன்பஞ் செய்தும், இன்று தன் உறவும்,
கிளையும்  போரில்  பலியாவதை  இரக்கமின்றி ஏற்றும் நின்றமையால்
இராவணனைக்   கொடியான்   என்றார்.  “கடைக்கண்ணால்  நோக்கி
என்பதற்கு,   பிராட்டியை  விட்டு  விடுகிறேன் என்று அழைப்பானோ
என்று பார்த்தான். என்பது பழைய உரை. கலுழ்தல் - சிந்துதல்.
 

                                                  (14)
 

9130.

இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர், விரைவின் 
                                         எய்தி,

‘விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும்’ 
                                          என்று

வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, ‘மன்னனைக் காமின், 
                                          யாதும்

கலங்கலிர்; இன்றே சென்று, மனிசரைக் கடப்பென்’ 
                                        என்றான்.

 

இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி -
இலங்கையிலுள்ள    அரக்கர்   எல்லோரும்   எழுந்து   விரைவுடன்
(இந்திரசித்தன்  அத்தேரை   அடைந்து;  விலங்கல்  அம்தோளாய்!
நின்னைப் பிரிகலம் விளிதும்  என்று
 -  மலை  போன்ற அழகிய
தோள்களை    உடையவனே!   உன்னை  யாங்கள்  பிரியமாட்டோம்.
(இறப்பதாயின்    உன்னுடனே)   இறப்போம்   என்று   கூறியவராய்;
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை - வலமாகத் தன்னைத் தொடர்ந்து
வருபவரை (இந்திரசித்து);  மன்னனைக் காமின், யாதும் கலங்கலிர் -
அரசனைக்  காப்பாற்றுங்கள் சிறிதும் கலக்கம் அடையாதீர்கள்; இன்றே
சென்று, மனிசரைக்  கடப்பென்  என்றான்
 -  நான் இப்பொழுதே
சென்று மனிதர்களை வெல்வேன்’ என்று கூறினான்,