| இந்திரசித்து வதைப் படலம் | 883 |
‘மன்னனைக்காமின்’ என்றதனால் மன்னனுக்கு ஆபத்து என்பதும் ‘யாதும் கலங்கலிர்’ என்றதனால், அனைவரும் கலக்கமடைந்துள்ளன ரென்பதும் பெறப்பட்டது. ‘மனிசரைக் கடப்பென்’ என்பவன் பின் ஏன் மன்னனைக் காமின் என்றான்? தன் வீ்ழ்ச்சி தவிர்க்க முடியாததும், உறுதியானதுமென இந்திரசித்து நினைத்ததினால் என்க. | (15) | 9131. | வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவினை நோக்கிக் தம் வாய் உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார் வெருவலுற்றுக் கணங் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும் அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து, அரிதின் போனான், | கணங்குழை மகளிர் ஈண்டி - திரண்ட குழைகளை உடைய மகளிர் நெருங்கி வந்து; வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவினை நோக்கி - வணங்குகின்றவர்களும், வாழ்த்துகின்றவர்களும் இந்திரசித்தின் வடிவினைப் பார்த்து; தம் வாய் உணங்குவார், உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் - தம்முடைய வாய் உலர்பவரும், பெருமூச்செறிவாரும் உள்ளம் உருகுகின்றவரும் ஆகி; வெருவலுற்று இரைத்தவர் கடைக்கண் என்னும் - அஞ்சி அரற்றினவர் தம் கடைக்கண் நோக்கு என்கின்ற; அணங்குடை நெடுவேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் - வருத்தும் தன்மை பொருந்திய நீண்ட வேல் பாய்கின்ற போரினை அரிதாகக் கடந்து இந்திரசித்து (இலக்குவனோடு செய்யும் போருக்குப்) போனான். | (16) | 9132. | ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன், எடுத்த வில்லான், சேய் இரு விசும்பை நோக்கி, ‘வீடண! தீயோன் அப் பால் போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும்’ என்பான், ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான். |
|
|
|