பக்கம் எண் :

884யுத்த காண்டம் 

ஏயினன் இன்னன் ஆக - (போர்க்களத்தை விட்டு) ஏகியவனாகிய
இந்திரசித்து இத்தன்மையனாக; இலக்குவன்,  எடுத்த வில்லான் சேய்
இருவிசும்பை  நோக்கி
  -  இலக்குவன்  கையில்  எடுத்த  வில்லை
உடையவனாய்        சேய்மைத்தாகிய     அகன்ற     ஆகாயத்தை
நோக்கிக்கொண்டு; வீடண! தீயோன் அப்பால்  போயினன்  ஆதல்
வேண்டும்; புரிந்திலன் ஒன்றும்’ என்பான்
- “வீடணா!  தீயவனாகிய
இந்திரசித்து  அப்பாற்  போயிருத்தல்  வேண்டும்    (மாயம்)  ஒன்றும்
செய்திலனே! என்று (வீடணனிடம்) கூறிக் கொண்டிருக்கையில்; ஆயிரம்
புரவி  பூண்ட  தேரின்  பேர் அரவம்  கேட்டான்
  -   ஆயிரம்
குதிரைகள்   கட்டிய   தேரின்  பெரிய முழக்கத்தைக் கேட்டான்.
 

                                                  (17)
 

அறுசீர்ச் சந்த விருத்தம்
 

9133.

குன்று இடை நெரிதர, வடவரையின்
    குவடு உருள்குவது என முடுகுதொறும்,
பொன் திணி கொடியினது, இடி உருமின்
    அதிர் குரல் முரல்வது, புனை மணியின்
மின் திரள் சுடரது, கடல் பருகும்
    வடவனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய,-
    திரி புவனமும் உறு தனி இரதம்.
 

திரிபுவனமும்   உறுதனி இரதம் - மூன்று உலகங்களிலும் திரிந்த
(இந்திரசித்தன்)      ஒப்பற்ற  தேர்; இடை  குன்று நெரிதர, பொன்
திணி    கொடியினது
 -   வழியிலுள்ள குன்றுகள் எல்லாம் பொடிப்
பொடியாய்    நெரிந்து   போகுமாறும்  பொன்னால்  நிரப்பப்  பெற்ற
கொடிகளை    உடைய;  வடவரையின்  குவடு  உருள்குவதென  -
வடதிசை உள்ள  மேருமலையின்     சிகரமொன்று     உருளுகின்றது
என்று    சொல்லுமாறும்; முடுகு  தொறும் இடி உருமின் அதிர்குரல்
முரல்வது
- விரைந்து   செல்லும்  தோறும் பேரிடியின்  முழங்குகின்ற
குரலை    எழுப்புவதாய்  இருந்தது; புனை  மணியின்  மின்  திரள்
சுடரது
 - அலங்கரிக்கப்  பெற்ற  இரத்தினங்களின்  மின்னலை  ஒத்த
ஒளித் திரள்களான  ஒளியை  வீசுவது; உலகு  இரிய  திசை திசை -
உலகம் அஞ்சி  ஓடும்படி  பல திசைகளிலும்; கடல் பருகும் வடவனல்
வெளி உற வருவது எனச் சென்றது
- கடல் நீரை மிகாமற் பருகும்