| | இந்திரசித்து வதைப் படலம் | 885 |
இயல்பினை உடைய வடவைக்கனல் (அக்கடலை விட்டு) வெளியிலே வருகின்றது என்று சொல்லுமாறு ஓடிற்று | (18) | | 9134. | கடல் மறுகிட, உலகு உலைய, நெடுங் கரி இரிதர, எதிர் கவி குலமும் குடர் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழி படரும் இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் படம் மறுகிட, எதிர் விரவியது-அவ் இருள் பகல் உற வரு பகை இரதம். | அவ் இருள் பகல் உறவரு பகை இரதம் - அந்த இரவு இருள் பகலாகப் பொருந்துமாறு ஒளியுடன் வருகின்ற பகைவனுடைய இரதம்; எதிர் கவிகுலமும் குடல் மறுகிட - எதிர்க்கின்ற குரக்கினங்கள் குடல் கலங்கவும்; கடல் மறுகிட, உலகு உலைய நெடுங்கரி இரிதர - கடல் கலங்கவும், உலகம் வருந்தவும், நெடிய திசை யானைகள் அஞ்சி ஓடவும்; மலை குலைய நிலம் குழியொடு கிழிபட - அட்ட குலமலைகள் குலுங்கவும், நிலம் குழியாதலொடு கிழிபடவும்; வழிபடரும் இடம் மறுகிய பொடி முடுகிடவும் - செல்லுகின்ற வழியாகிய இடம் கலங்கியதாலாய புழுதி விண்ணில் விரைந்து செல்லவும்; இருள் உளது என எழும் இகல் அரவின் படம் மறுகிட எதிர் விரவியது - இருள் உளது என்று கண்டோர் கருதுமாறு நஞ்சினைக் கக்கிக்கொண்டு மேல் எழுகின்ற வலிமையுள்ள ஆதி சேடனுடைய படம் வருந்தவும் இலக்குவனுக்கு எதிரே வந்தது. | (19) | இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல் | | 9135. | ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன் அமரரும் வெருவினர்; கவி குலமும் வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்; விடு கணை சிதறினன், அடுதொழிலோன்; தீர்த்தனும், அவன் எதிர் முடுகி, நெடுந் திசை செவிடு எறிதர, விசை கெழு திண் |
|
|
|