பக்கம் எண் :

886யுத்த காண்டம் 

போர்த் தொழில் புரிதலும், உலகு கடும்
    புகையொடு சிகை அனல் பொதுளியதால்.
 

நிருதர் தம் அனிகம் ஆர்த்தது உடன் அமரரும்  வெருவினர்
- அரக்கர்  சேனை  ஆரவாரித்தது  உடனே  தேவர்களும் அஞ்சினர்;
கவிகுலமும் வெருவலோடு அலம் வரலால்  வேர்த்தது  -  வானர
சேனையும்    அஞ்சுதலோடு    துன்புறுதலால்    வேர்த்தது;   அடு
தொழிலோன்   விடுகணை    சிதறினன் 
 - கொலைத் தொழிலை
உடைய  இந்திரசித்து     விடுதற்குரிய  அம்புகளை வில்லில் கோத்து
விடுத்தான்;   தீர்த்தனும்  அவன்  எதிர்  முடுகி  நெடுந்  திசை
செவிடு எறிதர
-  தூயவனான  இலக்குவனும்  அந்த  இந்திரசித்தின்
எதிரே விரைந்து சென்று  நெடிய  திசைகளெல்லாம்  செவிடுபடும் படி
(ஆரவாரித்து); விசை   கெழுதிண்  போர்த்தொழில்  புரிதலும் -
விரைவு     பொருந்திய   திண்ணிய  போர்த்தொழிலைச்  செய்தலும்;
உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால்  -  உலகில்
கடுமையான புகையோடு கொழுந்து விட்டு எரியும் தழல் நிரம்பியது.
 

                                                  (20)
 

 

9136.

வீடணன் அமலனை, ‘விறல் கெழு போர்
    விடலையை இனி இடை விடல் உளதேல்,
சூடலை, துறு மலர் வாகை’ எனத்
    தொழுதனன்; அவ் அளவில் அழகனும் அக்
கோடு அணை வரி சிலை உலகு உலைய
    குல வரை பிதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண்
    தெறு கணை முறை முறை சிதறினனால்.
 

வீடணன்     அமலனை - வீடணன், தூயவனாகிய இலக்குவனை
நோக்கி;   விறல்   கெழுபோர்   விடலையை இனி இடை விடல்
உளதேல்
-   “வெற்றி   பொருந்திய   போராற்றல்   மிக்கவனாகிய
இந்திரசித்தனை இனி போரின் இடையே  கொல்லாமல்  (முன்  போல்
மறைய)  விடுதல் உண்டாகுமாயின்; துறுமலர்  வாகை சூடலை எனத்
தொழுதனன்
- நீ நெருங்கிய  மலர்களை  உடைய  வாகை மாலையை
(வெற்றியை) சூட மாட்டாய்” எனக் கூறித்