பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 887

தொழுதானாக; அழகனும்  அவ்வளவில் அக்கோடு அணை வரி
சிலை
 -  அழகனாகிய  இலக்குவனும்   அவ்வளவில்  அந்தப் பெரு
முழக்கத்தையுடைய  கட்டமைந்த  வில்லில்;  உலகு உலைய குலவரை
விதிர்பட   நிலவரையில்  சேடனும் வெருவுற
  -   உலகெல்லாம்
வருந்துமாறும்,  பெரும்   மலைகள்  பிதிர்பட்டு  உதிரவும்,  நிலத்தின்
அடியிலுள்ள ஆதிசேடனும்  அஞ்சுதல் செய்யவும்; உரும் உறழ் திண்
தெறுகணை முறை  முறை சிதறினனால்
 - இடியை ஒத்த திண்ணிய
அழித்தல்    தன்மை   பொருந்திய  அம்புகளை  முறை  முறையாகக்
கோத்து எய்தான்.
 

                                                  (21)
 

9137.

ஆயிர அளவின அயில் முக வாய்
    அடு கணை அவன் விட, இவன் விட, அத்
தீயினும் எரிவன உயிர் பருக,
    சிதறின கவிகளொடு இன நிருதர்,
போயின போயின திசை நிறையப்
    புரள்பவர் முடிவு இலர்; பொரு திறலோர்
ஏயின, ஒருவரை ஒருவர் குறித்து,
    எரி கணை, இரு மழை பொழிவனபோல்.
 

அயில்    முகவாய்  அடுகணை ஆயிர அளவின அவன் விட
இவன்     விட 
-   அவ்வமையம்    அனல்  சிந்தும்  முனையை
உடையவாய்க் கொல்லுகின்ற   அம்புகளை  அவ்விந்திரசித்து  விடவும்,
அவனுக்கு எதிரே   இலக்குவன்  விடவும்;    அத்தீயினும்  எரிவன
உயிர்  பருக, சிதறின   கவிகளொடு   இன  நிருதர்
 -  அந்தத்
தீயினும்  மிக்கு   எரிவனவாய்   உயிரைப்   பருகுதலால்,  சிதறுண்ட
வானரங்களோடு   கூட்டமான   அரக்கர்கள்   (ஆற்றாமல்)  போயின
போயின  திசை நிறையப் புரள்பவர்  முடிவு இலர்  -  சென்ற  சென்ற
திசைகள்   நிறையுமாறு      புரள்கின்றவர்கள்   எண்ணற்றவராயினர்;
பொருதிறலோர்   எரிகணை    சொரிவன  இரு  மழை  போல்
ஒருவரை ஒருவர் குறித்து ஏயினர்
  -  போராற்றல்  மிக்க  இந்திர
சித்தும்  இலக்குவனும்  தீ   அம்புகளையே    சொரிகின்ற இரண்டுமே
மேகங்களைப் போல ஒருவரை  ஒருவர் குறித்து அம்புகளை ஏவினர்.
 

                                                  (22)
 

9138.

அற்றன, அனல் விழி நிருதன் வழங்கு
    அடு கணை இடை இடை; அடல் அரியின்