9140. | ‘வில்லினின் வலி தரல் அரிது’ எனலால், வெயிலினும் அனல் உமிழ் அயில், ‘விரைவில் செல்’ என, மிடல் கொடு கடவினன்; மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்; எல்லினும் வெளி பட எதிர்வது கண்டு, இளையவன் எழு வகை முனிவர்கள்தம் சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால், நடு இரு துணிபட உரறினனால். |