பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 89

                     இராமன் வானரரை விலக்கி மயிடனை வினவல்

7772.போதம் முதல், ‘வாய்மொழியே புகல்வான்;
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின்’ எனா,
வேதம் முதல் நாதன் விலக்கினனால்.

போதம்  முதல் - மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவனும்; வேதம்
முதல்   நாதன்
  -   வேதங்கள்   விளக்கும்  சிறப்புப்  பொருளாய்
உள்ளவனும்  ஆகிய  இராமபிரான்;  வாய்  மொழியே  புகல்வான் -
(பற்றிய   வானர  வீரர்களைப்  பார்த்து)   இவன்   தலைவன்  கூறிய
சொற்களைச்   சொல்லுபவன்; ஏதும்   அறியான்  -  வேறு  எதுவும்
அறியாதவன்;  வறிது  ஏகினனால்  -  படைக்கலம் இன்றி வெறுமனே
வந்துள்ளான்;  தூதன்  -  (ஆகவே  இவன்) தூதுவனாக  இருக்கலாம்;
இவனைச்  சுளியன்  மின் எனா - (எனவே) இவனை வெகுளாதீர்கள்
என்று; விலக்கினனால் - (அந்த வானர வீரர்களை) விலக்கினான்;

போதம்     முதல்    ஞானத்தால்    அறியப்படும்     முதல்வன்
(மெய்யுணர்வுக்கு   முதலாய்  இருப்பவன்)  சுளிதல்   -   வெகுளுதல்,
வேதம் முதல் நாதன் - வேதம் கிடந்து தடுமாறி விளக்கும் பொருள்.

                                                  (46)

7773.‘என், வந்த குறிப்பு? அது இயம்பு’ எனலும்,
மின் வந்த எயிற்றவன், ‘வில் வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்,
மன் வந்த கருத்து’ என, ‘மன்னர்பிரான்!’

என்  வந்த கருத்து அது இயம்பு எனலும் - (வானரரை விலக்கிய
இராமன்)  நீ  வந்த  காரணம்  எது  பற்றியது  அதைச்  சொல் எனக்
கேட்ட அளவில்; மின் வந்த எயிற்றவன் - ஒளி பொருந்திய பற்களை
உடைய  (அந்த  மயிடன்); வில்வல, மன்னர் பிரான் - வில் தொழில்
வல்லவனே  மன்னர்  பெருமானே; மன் வந்த கருத்து - எம்  மரசன்
கொண்டுள்ள  கருத்தை;  உன்  பின் வந்தவனே அறி பெற்றியதால்
என
- உன் பின் பிறந்தவனாகிய இலக்குவனே அறியும் தன்மையது என;
(அடுத்த பாடலில் தொடர் முடியும்.)

                                                  (47)

            இலக்குவன் வினவ, தூதன் தான் வந்த செய்தி உரைத்தல்

7774.‘சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு’ எனா,
வில்லாளன் இளங்கிளையோன் விவை,