| சோணிதம் நிலம் உற, உலறிடவும், தொடு கணை விடுவன மிடல் கெழு திண் பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன் மருமகன், அடு கணை வன் தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட, முறை முறை சிதறினனால். | ஆயிரம் விசிகம் ஆணியின் நிலையன உடல் புக - இலக்குவன் விடுத்த ஆயிரம் அம்புகள் ஆணிகள் போலத்தைத்து இந்திரசித்தின் உடம்பில் புகுதலால்; அழிபடு செஞ் சோணிதம் நிலம் உற, உலறிடவும்-அங்கிருந்து பெருகுகின்ற சிவந்த இரத்தம் நிலத்தில் விழ உடம்பு இரத்தம் இல்லாமல் வற்றவும் (சோராது); தொடுகணை விடுவன மிடல் கெழுதிண் பாணிகள் கடுகின முடுகிடலும் - வில்லில் தொடுக்கின்ற அம்புகளை விடுவனவாகிய வலிமை பொருந்திய திண்ணிய கைகள் அம்புகளை அம்பறாத் தூணியிலிருந்து எடுக்க மிகவும் விரைந்து சென்ற அளவில்; பகலவன் மருமகன் அடுகணை வன் தூணியை - சூரிய குலத்தோன்றலான இலக்குவன், கொல்லுங்கணைகள் நிறைந்த வலிய அம்பறாத் தூணியை; உரும்உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் - இடியையொத்த வலிய அம்புகளால் துணிபடுமாறு முறை முறையே எய்தான். | (26) | 9142. | ‘தேர் உளது எனின், இவன் வலி தொலையான்’ எனும் அது தெரிவுற, உணர் உறுவான், போர் உறு புரவிகள் படுகிலவால்; புனை பிணி துணிகில, பொரு கணையால்; சீரிது, பெரிது, இதன் நிலைமை’ எனத் தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால், சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும், முறை திரிய. | தேர் உளது எனின் இவன் வலி தொலையான் - தேர் அழியா திருக்குமாயின் இந்த இந்திரசித்து வலிமை அழியான்; எனும் அது தெரிவுற, உணர் உறுவான் - என்கின்ற அதனைத் தெளிவாக உணர்ந்துள்ள இலக்குவன்; பொருகணையால் போர் உறு புரவிகள் படுகிலவால் - (தேரை அழிக்க முயன்று பார்த்து) நமது போர் செய்யும் கணைகளால் இவன் தேரில் பூட்டியுள்ள போர்த் |
|
|
|