தன்மை பொருந்திய குதிரைகள் வீழ்ந்தில; புனை பிணி துணிகில சீரிது பெரிது இதன் நிலைமை எனத் தெரிபவன்-தேர் உறுப்புகள் பொருந்தி உள்ள மூட்டுவாய்களும் துணிபடவில்லை. இத்தேரின் நிலைமை மிக்க சிறப்புடையது என்று தெரிந்தவனாய்; ஒரு சுடு தெறு கணையால் சாரதி மலை புரை தலையை -ஒரு சுடுகின்ற அழிக்கும் அம்பினால் அத்தேர்ப்பாகனது மலை போன்ற தலையைக் கொய்து; முறை திரிய நெடுந் தரையிடை இடுதலும் - அவன் நிலை கெடப் பெரிய தரையினில் இடுதலும். |