பக்கம் எண் :

892யுத்த காண்டம் 

9144.துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல்,    அனுமன்தன்மேல்,    மற்றையோர் மல்
                                 திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன், எவரும் உட்க,
 

துள்ளு  பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி -
(இந்திரசித்து)  துள்ளுதலோடு  பாய்ந்து  செல்லுகின்ற குதிரைகளைப்
பூட்டியுள்ள தேரையும் தானே முறை முறையாகத் தூண்டிக்கொண்டே;
தன்பேர் ஆகமே ஆவம் ஆக அள்ளினன் பறிக்கும் பகழி-தனது
பெரிய  மார்பகமே  அம்பறாத் தூணியாகக் கொண்டு கையால் பற்றிப்
பறித்த   அம்புகளை;  வள்ளல்   மேல்  அனுமன்  தன்  மேல்,
மற்றையோர்  மல்திண்   தோள்மேல்
 -   இலக்குவன்   மேலும்,
அனுமன்  மேலும், மற்றையோர்  தம்  மல்தொழில் பயின்ற தோள்கள்
மேலும்; உள்ளுறத் தூவி எவரும் உட்க ஆர்த்தனன் -அழுந்துமாறு
தூவிவிட்டு யாவரும் அஞ்சுமாறு ஆரவாரித்தான்.
 

                                                 (29)
 

         இந்திரசித்தின் வீரம் கண்டு தேவரும் இலக்குவனும் வியத்தல்
 

9145.‘வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்;
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற்பாலார், துஞ்சும் போது உணர்வின் 
                                        சோராத்
தீரர்’ என்று அமரர் செப்பி, சிந்தினார், தெய்வப் பொற் பூ.

 

வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்-“இவன்
வீரர்  என்று  புகழப்படுவோர்கட்கு எல்லாம் முன்  நிற்பதற்குரிய வீரர்
வீரன்; பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?-
வீரத்தில்  பேர்  பெற்றவர்கள்   ஆதற்குரிய  தன்மை இத்தன்மையதே
ஆகும்;  சூரர் என்று உரைக்கற்பாலார் துஞ்சும் போது உணர்வின்
சோராத்  தீரர்
- சூரர் என்று சிறப்பித்துக் கூறத்தக்கவர்கள் இறக்கும்
போது வீர உணர்ச்சியில் சோர்வடையாத