| இந்திரசித்து வதைப் படலம் | 893 |
துணிவுடையவர் ஆவர்; என்று அமரர் செப்பி தெய்வப் பொற்பூ சிந்தினார் - என்று தேவர்கள் சொல்லிக் கொண்டு தெய்வத் தன்மை வாய்ந்த கற்பக மலர்களாகிய பொன் மலர்களைச் சொரிந்தார்கள். | (30) | 9146. | ‘எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்; கய் தடுமாறாது; உள்ளம் உயிர் இனம் கலங்கா; யாக்கை மொய் கணை கோடி கோடி மொய்க்கவும், இளைப்பு ஒன்று இல்லான், அய்யனும், ‘இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் என்றான். | அய்யனும், எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும் - இலக்குவனும், “யான் எய்த வலிய அம்புகளையெல்லாம் பறித்து இவன் என்மேல் எய்கின்றான்; கய் தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா - இவன் கை தடுமாற வில்லை, இவன் உள்ளமும் உயிரும் இன்னும் துளங்காமல் இருக்கின்றன; யாக்கை மொய்கணை கோடி கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் - (இவன்) உடம்பில் வலிமை வாய்ந்த அம்புகள் கோடி கோடியாக மொய்த்துதைக்கவும் இளைப்புச் சிறிதும் இல்லாதவனாக இருக்கின்றான்; ஆண்மைத் தொழில் ஆற்றல் இவனோடு எஞ்சும் என்றான் - (ஆதலால்) ஆண்மைத் தொழிலாகிய ஆற்றல் இவனோடு அழியும் என்று வியந்து கூறினான். | (31) | இந்திரசித்தன் இரவில் இறவான் என இலக்குவனுக்கு வீடணன இயம்புதல் | 9147. | ‘தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும் போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக் காரினைக் கடந்தும் வஞ்சம், கருதினும் கருதும், காண்டி, வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன். |
|
|
|