தேரினைக் கடாவி வானில் செல்லினும் செல்லும் - தேரினைச் செலுத்திக்கொண்டு வானத்தில் சென்றாலும் செல்வான்; செய்யும் போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் - நேரே செய்யும் போரை விடுத்து (இவ்விடத்தே) மாயச் செயல்களைச் செய்தாலும் செய்வான்; போய் அக் காரினைக் கடந்தும் வஞ்சம் கருதினும் கருதும் - விண்ணில் போய் அந்த மேகத்தில் கலந்து கொண்டு வஞ்சனைச் செயல்கள் செய்ய நினைத்தாலும் நினைப்பான்; வீர காண்டி, வெய்யோன் பகலில் அன்றி இருளின் விளிகிலன் மெய் - வீரனே! கருத்தோடு காண்பாயாக! கொடியனாகிய இந்த இந்திரசித்து பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்; இது உண்மை. |
(32) |
9148. | என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, ‘இன்னே பொன்றுவது அல்லால், அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ? சென்றுழிச் செல்லும் அன்றே தெறு கணை; வலியின் தீர்ந்தான், வென்றி இப்போதே கோடும்; காண்’ என விளம்பும் எல்லை. |
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப-என்று இலங்கை வேந்தனாகி, இராவணனுக்கு இளையவனாகிய வீடணன் எடுத்துச் சொல்ல; இன்னே பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ - (இலக்குவன்) இப்பொழுதே அவன் இறப்பது அல்லால் இனி ஒருமுறை அப்பால் போதலும் உண்டோ? தெறுகணை சென்றுழிச் செல்லும் அன்றே - அழிக்கின்ற என் அம்புகள் அவன் சென்ற இடத்திற்குச் செல்லும் அன்றோ? வலியின் தீர்ந்தான் - (அவன்) வலிமை நீங்கினான்; இப்போதே வென்றி கோடும் காண் என விளம்பும் எல்லை - இப்பொழுதே வெற்றி கொள்வோம் பார்ப்பாயாக என்று சொல்லும் அளவில்; |
(33) |
9149. | செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும் அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும், |