| இந்திரசித்து வதைப் படலம் | 895 |
| வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும், அரக்கன் மெய்யோடு உம்பரில் செல்கின்றான் ஒத்து, உதித்தனன், அருக்கன் உப்பால். | செம்புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும் - செந்நீராகிய இரத்தம் போன்ற செக்கர் வானம் (கீழ்த்) திசையின் கண் பொருந்த நெருங்குகையினாலும்; அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் - அம்புகளைப் போலப் பொருந்திய வெற்றி வாய்ந்த ஆயிரங் கதிர்களையுடைமையாலும்; வெம்பு பொன் தேரில் தோன்றும் சிறப்பினும் - வெம்புகின்ற பொன் தேரில் தோன்றுகின்ற சிறப்புடைமையாலும்; அரக்கன் மெய்யோடு உம்பரில் செல்கின்றான் ஒத்து அருக்கன் உப்பால் உதித்தனன் - இந்திரசித்தன் தன் உடம்போடு தரையிலிருந்து விண்ணில் செல்பவனைப் போன்று சூரியன் கீழ்த்திசையில் உதித்தான். | (34) | 9150. | விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதாய், இடுஞ் சுடர் விளக்கம் என்ன அரக்கரின் இருளும் வீய, ‘கொடுஞ் சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து குன்ற, முடிந்தனன், அரக்கன்’ என்னா, முழங்கினர், உம்பர் முற்றும். | பொழுதும் விடிந்தது அரக்கரின் இருளும் வீய - பொழுதும் விடிந்தது. அரக்கரைப் போன்று இருளும் அழியுமாறு; வெய்யோன் உலகம் மீதாய் இடும் சுடர் விளக்கம் என்ன விளங்கினன்-சூரியன் உலகின்மேல் இட்ட சுடர் விடுகின்ற விளக்கு என்னும் படி விளக்கம் பெற்றுவிட்டான்; அரக்கன் வலியொடும் கொடுஞ் சினமாயச் செய்கை குறைந்து நின்ற - இனி இந்திரசித்து தன் வலிமையொடு கொடிய கோபமும் மாயச் செயலும் குறைந்து அழிய; முடிந்தனன் என்னா உம்பர் முற்றும் முழங்கினர் - முடிந்தனனே ஆவான் என்று தேவர் வானமெங்கும் ஆரவாரித்தனர். | (35) |
|
|
|