‘சிவன் ஈந்த தேரும் சிலையும் இருக்கும் வரை அழியான்’ என வீடணன் குறிப்பித்தல் |
| 9151. | ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த தேர் அழியாத போதும், சிலை கரந்து இருந்தபோதும், போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் - தோள் வீர! இது ஆணை’ என்றான்-வீடணன், விளைவது ஓர்வான். |
விளைவது ஓர்வான் வீடணன் -மேல் நிகழ்வதை அறிந்தவனாகிய வீடணன்; புகழ் அழியாத பொன் - தோள் வீர! - (இலக்குவனை நோக்கி) புகழ் அழியாமைக்குக் காரணமாகிய அழகிய தோள்களை உடையவீரனே!ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த- கூர்மையழியாத சூலப்படையை உடைய அந்தணனாகிய சிவபெருமான் அருள் செய்து கொடுத்த;தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்தபோதும் - தேர் அழியாதபோதும், வில் அவன் கரத்தில் இருக்கும் போதும்; இவ்வெய்யோன் போர் அழியான் இது ஆணை’ என்றான் - இக்கொடியவன் போரில் அழியமாட்டான். இது அவ்விறைவனின் ஆணையாகும்’ என்று கூறினான். |
இவ்வரத்தினை இந்திரசித்து எங்ஙனம் பெற்றான் என்பது காணற்பாலது. ‘தேரும் வில்லும் சிவன் அருளினால் கொடுக்கப்பெற்றவை. அவை அழியாமலிருக்கும் போது இவனும் அழியான் என்பது அக்கடவுள் இவனுக்குக் கொடுத்தவரம்’ என வீடணன் இலக்குவனுக்கு இந்திரசித்தினை உயிர் வாங்கற்கு உபாயங் கூறியவாறு. |
(36) |
இலக்குவன் இந்திரசித்தன் தேரைச் சிதைக்க, அவன் விண்ணில் மறைந்து ஆரவாரித்தல் |
| 9152. | ‘பச்சை வெம் புரவி வீயா; பல்லியச் சில்லி பாரில் நிச்சயம் அற்று நீங்கா’ என்பது நினைந்து, வில்லின் விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி. |