பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 897

வில்லின்   விச்சையின் கணவன்  ஆனான் - வில்வித்தைக்குத்
தலைவனாகிய இலக்குவன்; ‘வெம்பச்சைப் புரவிவீயா - (இந்திரசித்தின்
தேரில்  பூட்டியுள்ள)  கொடிய  பச்சைப்புரவிகள் இறந்துபடா; பல்லியச்
சில்லிபாரில்  நிச்சயம் அற்று  நீங்கா
 -  பல இயல்புகள் அமைந்த
(தேரின்)  சக்கரங்கள் உறுதியற்று பூமியில் அழியா; என்பது நினைந்து
வின்மையால்  ஆணி  நீக்கி
 -  என்பதை  நினைந்து  தன்வில்லின்
திறத்தால்  கடையாணியை  நீக்கிவிட்டு;வயிரம்  இட்ட அச்சினோடு
ஆழி   வெவ்வேறு   ஆக்கினான்
 -  வயிரத்தன்மை  பொருந்திய
அச்சினோடு சக்கரத்தை வெவ்வேறாகப் பிரித்து விட்டான்.
 

                                                 (37)
 

9153.மணி நெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும்,
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே-
திணி நெடு மரம் ஒன்று, ஆழி வாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல.
 

மணி    நெடுந் தேரின் கட்டுவிட்டு அது மறிதலோடும் - ஒளி
மணிகள் பதித்துச் செய்யப்பட்ட நெடிய தேரின்  கட்டுக்கோப்பு  நீங்கி,
அத்தேர்  கீழ்மேல்  ஆனவுடன்;  அணி நெடும் புரவி  எல்லாம் -
(அத்தேரில்  கட்டியிருந்த)  அழகிய  பெருமை   வாய்ந்த  குதிரைகள்
எல்லாம்;   திணி நெடும்  மரம்  ஒன்று ஆழிவாள் மழுத்தாக்க -
திண்மையான   நீண்ட   மரம்   ஒன்று   சக்கரப்படையைப்  போன்ற
கூர்மையுடைய  கோடாலி  தாக்குதலால்;சிந்திப்பணை நெடு முதலும்
நீங்க
- சிதறிப் பருத்த நெடிய அடி மரமும் துணிபட்டு வேறாகி  நீங்க;
பாங்கு   உறை   பறவை   போல  ஆற்றல  ஆய  அன்றே -
அம்மரத்திடத்தே      தங்கி      இருந்த     பறவைகளைப்போலப்
பிரிவாற்றாதனவாய் வருந்துவனவாயின.
 

                                                 (38)
 

9154.அழிந்த  தேர்த்  தட்டின்நின்றும் அங்குள்ள படைகள்
                                      அள்ளிப்
பொழிந்தன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,