பக்கம் எண் :

898யுத்த காண்டம் 

மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான், உலகம்
                                        மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார்,
 

அழிந்த தேர்த்தட்டின் நின்றும் அங்குள்ள படைகள் அள்ளி-
அழிந்துபட்ட  தேரின்  தட்டில்  நின்று கொண்டு அத்தட்டில் இருந்த
படைக்கலங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு; பொழிந்தனன், இளைய
வீரன்   கணைகளால்   துணித்துப்போக்க
 -  இலக்குவன்   மேல்
பொழிந்தான்   இந்திரசித்து;   அவற்றையெலாம்    இலக்குவன்  தன்
அம்புகளால் துண்டித்து அழிக்க; மொழிந்து இறாவகையில் விண்ணை
முட்டினான்
  -  சொல்லுஞ்சொல்  முடிவதற்குமுன்  (வெகுவிரைவில்)
வானத்தில்   மூண்டு   நின்று;  உலகம் மூன்றும் கிழிந்தன  என்ன
ஆர்த்தான்;   கண்டிலர்  ஓசை  கேட்டார்
 - உலகங்கள் மூன்றும்
கிழிந்தன   என்று   எண்ணுமாறு   ஆரவாரித்தான்;  யாரும்  அவன்
வடிவைக்   கண்டிலர்;   ‘ஆனால்   அவன்   ஆரவாரத்தை  மட்டும்
கேட்டனர்.
 

                                                 (39)
 

                              இந்திரசித்தன் - இலக்குவன் போர்
 

9155.மல்லின் மா மாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியும்காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள்
                                          சிந்தப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார்.

 

மல்லின்   மாரி அன்ன தோளினான் - மற்போர் பயிற்சியினை
உடையதும்   கரிய   மேகம்   போன்ற  நிறத்தினை  உடையதுமான
தோளினை  உடைய  இந்திரசித்து;  மழையின்  வாய்ந்த  கல்லின்
மாமாரி
-    மேகத்தில்    பொருந்தி    இருந்த   கல்லினாலாகிய
மழையை; பெற்றவரத்தினால்  சொரியுங்காலை -  தான் முன்பெற்ற
வரத்தினால் சொரியும்  போது;  செல்லும்  வான்  திசைகள் ஓரார்
போகார் நின்ற வானரவீரர்
  -   தப்பிச்  செல்லுவதற்குரிய  சிறந்த
திசைகளையும் அறியாதவராய் போகவியலாமல் நின்றவானர வீரர்கள்;