சிரத்தினோடு உடல்கள் சிந்தப் புல்லினார் நிலத்தை- தலைகளோடு உடல்கள் சிதையப் பெற்றுத் தரையில் வீழ்ந்து கிடந்தார்கள். |
(40) |
9156. | காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன், சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும் மான் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ, ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல். |
காளை வீரன், சேண்கலந்து ஒளித்து நின்ற செய்கையால் - காளைவீரனான இலக்குவன் (இந்திரசித்து) வானத்துச் சென்று மேகத்தில் மறைந்து நின்ற செய்கையால்; கல்லின் மாரி அல்லது காண்கிலன் - கல்லின் மழை அல்லது அவன் வடிவினைச் சிறிதும் காணமாட்டாதவனாய்; மாண் கலந்து திசைகள் எங்கும் அளந்தமாயன் முடிவு என முழுவதும் வௌவ - பெருமையோடு பொருந்தித் திசை முழுவதையும் அளந்த (திருவிக்கிரமனான) திருமாலின் வடிவுபோல விண் முழுவதையும் கவர்ந்து கொள்ளுமாறு; ஏண் கலந்து அமைந்த வாளி இடைவிடாமல் ஏவினான் - வலிமை கலந்து பொருந்திய அம்புகளை இடைவிடாமல் ஏவினான். |
(41) |
9157. | மறைந்தன திசைகள் எங்கும்; மாறு போய் மலையும் ஆற்றல் குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குறுதிக் கொண்மூ உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம் நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைவது ஆனான்: |
திசைகள் எங்கும் மறைந்தன - (இலக்குவன் விட்ட அம்புகளால்) திசையிடம் முழுவதும் மறைந்தன; மாறுபோய் மலையும் ஆற்றல் குறைந்தனன் - (அவனுக்கு) மாறாகச் சென்று போர் செய்யும் வலிமை குறைந்தவனாய்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ உறைந்துளது என்ன நின்றான் |