| அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.* |
பெண் எலாம் நீரே ஆக்கி - நான் விரும்பும் பெண் எலாம் நீரே என்று ஆக்கி; பேர் எலாம் உமதே ஆக்கி - யான் விரும்பி அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி; கண் எலாம் நும் கண் ஆக்கி - என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி; காமவேள் என்னும் நாமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி - காமவேள் என்று பெயர் கொண்ட தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத் தொடுப்பவன் என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி - அக்காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து; விபரீதம் புணர்த்து விட்டீர் - என்னிடம் மாறுபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர். |
ஐங்கணை - தாமரை. அசோகு, மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து மலர் அம்புகள். விபரீதம் - மாறுபாடு. |
(12) |
7644. | ‘ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக் கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? |
ஈசனே முதலா - சிவபிரானை முதலாகக் கொண்டு; மற்றை மானிடர் இறுதி ஆகக் கூச - மற்று மானிடர் வரை உள்ள அனைவரும் அஞ்சும்படி; மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென் - மூன்று உலகத்தையும் காக்கும்படி வெற்றி படைத்த நான்; வீரக்கோட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் - வீரர் வரிசையில் பேசப்படுபவர் எவருக்கும் உயிர் தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்றால் - அத்துணை வீர வலியுடைய என்னைப் பெண்ணிடம் வைத்த காம நோய் |