| ‘பல் ஆயிர கோடி படைக் கடல் முன் நில்லாய்’ என, நின்று நிகழ்த்தினனால்.
|
வில்லாளன் இளங்கிளையோன் - வில்லாளனாகிய இராம பிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன்; அது சொல்லாய் - (நீ வந்த காரணத்தைச்) சொல்வாய்; சொல்லிடு சொல்லிடு எனா வினவ - சொல்லிடு என்று வினவ; பல் ஆயிர கோடி படைக் கடல் முன் - (அதிகாயனுடைய) பல ஆயிரம் கோடிப் படையாகிய கடலுக்கு முன்; நில்லாய் என - எதிர்த்து நிற்பாய் என்று; நின்று நிகழ்த்தினனால் - நின்று கொண்டு மேலும் கூறத் தொடங்கினான்.
|
சொல்லிடு சொல்லிடு - விரைவு கருதி வந்த அடுக்கு, படைக் கடல் - உருவகம், நில்லாய் - நிற்பாயாக.
|
(48)
|
| 7775. | ‘உன்மேல் அதிகாயன் உருத்துளனாய் நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்- தன்மேல் எதிரும் வலி தக்குளையேல், பொன் மேனிய! என்னொடு போதுதியால்.
|
பொன் மேனிய - பொன் போன்ற மேனிய; உன் மேல் அதிகாயன் உருத்துளனாய் - உன் மீது அதிகாயன் சினம் கொண்டவனாகி; நாடி நல்மேருவின் நின்றனன் - (உன்னை) எதிர் பார்த்து நல்ல மேருமலை போல் நின்றுள்ளான்; அவன் தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் - அவன் தன் மேல் எதிர்ப்பதற்கு உரிய வலிமை பெற்றுள்ளாயானால்; என்னோடு போதுதி - என்னோடு வருவாய்.
|
உருத்தல் - சினத்தல், நாடி - எதிர்பார்த்து, தக்குளையேல் - தகுதியைப் பெற்றுள்ளாயானால். பொன் மேனிய - அண்மை விளி, போதுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஆல் - அசை.
|
(49)
|
| 7776. | ‘சையப் படிவத்து ஒரு தந்தையை முன் மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து, ஐயப்படல், அப்படி இப் படியில் செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால்.
|
சையப் படிவத்து ஒரு தந்தையை - மலை போன்ற வடிவுடைய தந்தையின் (கும்பகருணனது); மெய் எப்படி நும்முன் செய்தனன் - உடம்பை எப்படி உன் தமையன் முன்பு |