பக்கம் எண் :

900யுத்த காண்டம் 

உருவினை     -  இருண்ட  மேகக்  கூட்டத்தினிடையே  இரத்தம்
சொரியும்  மேகம்  ஒன்று  தங்கியுள்ளது  என்னுமாறு நின்றவனாகிய
இந்திரசித்தன்   உருவத்தை;  உலகம்  எல்லாம்   நிறைந்தவன்
கண்டான்;  காணா   இனையது   ஓர்   நினைவது  ஆனான்
-
உலகெங்கும் நிறைந்து நிற்பவனாகிய இலக்குவன் பார்த்தான்; பார்த்து
இத்தகையதொரு எண்ணத்தை உடையவனான்.
 

                                                (42)
 

9158.‘சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட
                                        தோளாம்
மலை அறாது ஒழியாது’ என்னா, வரி சிலை ஒன்று வாங்கி,
கலை   அறாத்   திங்கள்   அன்ன  வாளியால், கையைக்
                                      கொய்தான்-
விலை அறா மணிப் பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ.
 

சிலை  அறாது எனினும் - (இந்திரசித்தின்) வில் என் அம்பினால்
அறுபடாத     தெய்வத்தன்மை     உடையது    எனினும்;    மற்று
அத்திண்ணியோன்  திரண்ட  தோளாம்  மலை அறாது ஒழியாது
என்னா 
-    அத்திண்மைமிக்கவனாகிய   இந்திரசித்தின்   திரண்ட
தோளாகிய  மலை   அறாமலிருக்காது   என்று   கருதிக்   கொண்டு;
வரிசிலை ஒன்று வாங்கி  கலை அறாத்திங்கள் அன்ன வாளியால்

-  கட்டமைந்ததொரு  வில்லை    வளைத்து   ஒருகலை  அறாதுள்ள
பிறைத்திங்களைப்    போன்ற    அம்பினால்;    கையை,    விலை
அறாமணிப்பூணோடும்,  வில்லொடும், நிலத்து வீழக்  கொய்தான்
-    அந்த      இந்திரசித்தினுடைய        கையை    விலைதீராத
(விலைமதிப்புடைய)     மணிகள்     பதித்த    அணிகலன்களோடும்
வில்லொடும்  தரையில்  வீழுமாறு  அறுத்துத் தள்ளினான்.
 

                                                 (43)
 

9159.பாக வான் பிறைபோல் வெவ் வாய்ச் சுடு கணை
                                 படுதலோடும்,
வேக வான் கொடுங் கால் எற்ற முற்றும் போய் விளியும்
                                        நாளில்,-
மாக வான் தடக் கை மண்மேல் விழுந்தது மணிப் பூண்
                                         மின்ன-
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன.