| இந்திரசித்து வதைப் படலம் | 901 |
வான்பாகப் பிறை போல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்- (இலக்குவன் விடுத்த) வானில் தோன்றும் பிறைச்சந்திரனைப் போல், கொடிய வாயினை உடையதாய்ச் சுடுகின்ற இயல்பினை உடைய அம்பு (இந்திரச்சித்தன்மேல்) பட்டவுடனே; வேகவான் கொடுங்கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் -மிக்க வேகத்தையுடைய கடுங்காற்று மோதுதலினால் உலகம் முழுவதும் சென்று அழியும் ஊழி இறுதியில்; மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன - மேகம் ஆகாயத்தில் இட்ட இந்திர வில்லினோடும் (மண்மிசை) வீழ்ந்ததுஎன்னும்படி; மாகவான் தடக்கை மணிப் பூண் மின்ன மண் மேல் விழுந்தது - ஆகாயத்தில் இருந்த சிறந்த பெரிய அவ்விந்திரசித்தின் கை மணிகள் பதித்த அணிகலன் மின்ன மண்மிசை வீழ்ந்தது. | (44) | 9160. | படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக் கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப் பிடித்த வெஞ் சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன்-தோள் துடித்தது,-மரமும் கல்லும் துகள் பட, குரங்கும் துஞ்ச. | படித்தலம் சுமந்த நாகம் - பூமியைச் சுமந்து கொண்டுள்ள ஆதிசேடன் என்னும் பாம்பு; பாக வான் பிறையைப் பற்றிக் கடித்தது போல - வானிலுள்ள சந்திரனின் பாகமாகிய பிறைச் சந்திரனைப் பற்றிக் கடித்தது போல; கோலவிரல்களால் இறுகக் கட்டிப் பிடித்தவெஞ் சிலையினோடும் - அழகிய விரல்களால் இறுகக்கட்டிப்பிடித்த கொடிய வில்லினோடும்; பேர் எழில் வீரன் பொன் - தோள் - பேரழகுடைய இந்திரசித்தன் அழகிய தோள்; மரமும் கல்லும் துகள்பட குரங்கும் துஞ்ச துடித்தது - மரங்களும் கற்களும் துகளாகவும் குரங்குகள் இறந்து படவும் நிலத்தில் வீழ்ந்து துடித்தது. | (45) | 9161. | அந்தரம்அதனில் நின்ற வானவர், ‘அருக்கன் வீழா, சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்து வீழா, |
|
|
|