| இந்திரசித்தின் பொன்-தோள் இற்று இடைவிழுந்தது என்றால், எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்?’ என்றார். | அந்தரம் அதனில் நின்ற வானவர் - (போர் நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி) வானத்தில் நின்ற தேவர்கள்; அருக்கன் வீழா; சந்திரன் வீழா மேருமால்வரை தகர்ந்து வீழா-சூரியன் வீழ்ந்தபோது, சந்திரன் வீழாமல் இருக்கும்போது, பெரிய மேருமலை உடைந்து வீழாது நிற்கும் போது; இந்திரசித்தன் பொன் தோள் இற்று இடை விழுந்தது என்றால் - இந்திரசித்தன் அழகிய தோள் அறுபட்டு நடுவே வீழ்ந்தது என்றால்; எந்திரம் அனைய வாழ்க்கை இனிச்சிலர் உகந்து என்? என்றார் - நிலை பேறின்றித் தேர்ச்சக்கரம் போன்று மாறிமாறிச் செல்கின்ற உயிர் வாழ்க்கையை இனிச்சிலர் நிலையெனக் கருதி மகிழ்வதால் பயன் என்ன? | (46) | 9162. | மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால், அப் பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன, கை அற, தலை அற்றார் போல் கலங்கினார், நிருதர் கண்டார். | மொய் அறமூர்த்தி் அன்ன மொய்ம்பினான் அம்பினால்-வலிமை பொருந்திய அறக்கடவுள் போன்ற வலிமையுடையவனாகிய இலக்குவனின் அம்பினால்; பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் - பொய்யைப் பெரும்பாதகமாக நினைக்காமல் மிகவும் எளிமையானது என்று கருதி மேற்கொள்ளும் பெருமையுடைய இராவணண் மகன்; பூத்த மை அறக்கரிது என்று எண்ணும் மனத்தினான் - அப்போது உண்டானமையானது (இவன் மனம் நம்மினும்) மிகக் கரியது’ என்று எண்ணுதற்குரிய கருமனத்தினன் ஆகிய இந்திரசித்தனுடைய; வயிரம் அன்னகை அறக்கண்டார் நிருதர் தலை அற்றார் போல் கலங்கினார் - வயிரம் போன்ற கை அற்றுப் போகக் |
|
|
|