| இந்திரசித்து வதைப் படலம் | 903 |
கண்டவர்களாகிய அரக்கர் தம் தலை அற்றவர்களைப் போல மனம் கலங்கினார்கள். | (47) | 9163. | அன்னது நிகழும் வேலை, ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம் மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளாவண்ணம், கொல் நகக் கரத்தால், பல்லால்; மரங்களால், மானக் குன்றால், பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே. | அன்னது நிகழும் வேலை அரியின் வெள்ளம் ஆர்த்து எழுந்து - இந்திரசித்தன் கையற்று வீழ்ந்தது கண்டு அரக்கர்கலங்கியபோது, குரங்குச் சேனை ஆரவாரித்து எழுந்து; மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் - மின்னலைப் போன்று ஒளி வீசும் கோரைப் பல்லினையுடைய அரக்கர் சேனையில் எவரும் மீளாதபடி; கொல் நகக் கரத்தால், பல்லால், மரங்களால், மானக் குன்றால் - கொல்லுதற்குரிய நகத்தை உடைய கையினாலும், பல்லினாலும், மரங்களாலும், பெரிய குன்றுகளாலும் (கொன்று); பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக்குடி ஏற்றிற்று அன்றே - பொன்னாடு முழுவதிலும் புதிதாகக் குடிகளை ஏறச் செய்தது. | (48) | 9164. | காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், ‘செம்மை காட்டும் ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன் அருளின் பெற்ற சூலம் கொண்டு எறிவல்’ என்று தோன்றினான், ‘பகையின் தோற்ற மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன்’ என்றான். | காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான் - கார்காலத்து நீர் கொண்டு எழுந்த மேகம் போன்ற கருமையுடைய இந்திரசித்து; செம்மை காட்டும் ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன்- செம்மேனியும் அதனால் மிகுவித்துக் |
|
|
|