பக்கம் எண் :

904யுத்த காண்டம் 

காட்டப்பெறும்     நஞ்சுண்டு  இருண்ட   கண்டத்தினையும்  உடைய
தேவர்   தலைவனாகிய  சிவபெருமானின்;  அருளின்  பெற்ற ‘சூலம்
கொண்டு   எறிவல்’  என்று தோன்றினான்
 -  அருளினால்  தான்
பெற்றதான  சூலப்படையைக்  கொண்டு (இவன்மீது)  எறிவேன்  என்று
தோன்றியவனான  இந்திரசித்து; ’பகையின்  தோற்ற கொண்டு மூலம்
உணரா நின்னை
- (எனது) பகைவாக்ளுக்குள்ளே மானிட  வடிவமாகிய
உனது   புறத்தோற்றத்தைக்   கொண்டு    (அவ்வடிவத்திற்  கொவ்வா
ஆற்றலின்)   மூலத்தை   உணர   முடியாத   உன்னை;  முடித்தன்றி
முடியேன் என்றான்
- கொன்றன்றி யான் இறவேன்’ என்று கூறினான்.
 
 

                                                 (49)
 

9165.காற்று என, உரும்ஏறு என்ன, கனல் என, கடை நாள் உற்ற
கூற்றம ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, ‘இனி, தலை துணிக்கும்
                                           காலம்
ஏற்றது’   என்று,   அயோத்தி   வேந்தற்கு  இளையவன்
                                இதனைச் செய்தான்.
 

கடைநாள்   உற்ற காற்று என, உரும் ஏறு என்ன கனல் என -
ஊழியிறுதியில்    வந்த    காற்று    என்னும்    படியும்,   இடியேறு
என்னும்படியும்,  வடவைக்கனல் என்னும் படியும்;  கூற்றம் ஓர் சூலம்
கொண்டு  குறுகியது  என்ன
 -  எமன்  ஒரு  சூலத்தைக்  கொண்டு
நெருங்கினான்   என்னும்படியும்;   கொல்வான்   தோன்றினான்   -
(இலக்குவனைக்) கொல்வதற்காக (இந்திரசித்து) தோன்றினான்;  அதனை
அயோத்தி  வேந்தற்கு  இளையவன்  காணா
-அதனை இராமனுக்கு
இளையவனாகிய  இலக்குவன்  கண்டு; ’இனி, தலை துணிக்கும் காலம்
ஏற்றது, என்று இதனைச் செய்தான்
- ‘இப்பொழுது இவன் தலையைத்
துணிக்கும் காலம் ‘வந்துவிட்டது’ என்று இச்செயலைச் செய்தான்.
 

                                                  (50)
 

   இலக்குவன் பிறைமுக அம்பு எய்து இந்திரசித்தன் தலையை அறுத்தல்
 

9166.‘மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால,
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின்,