பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 905

பிறை எயிற்று இவனைக் கோறி’ என்று, ஒரு பிறை வாய்
                                         வாளி
நிறை உற வாங்கி விட்டான்-உலகு எலாம் நிறுத்தி
                                       நின்றான்.

 

மறைகளே  தேறத்தக்க வேதியர் வணங்கற்பால இறையவன் -
வேதங்களே    தெளியத்தக்கவனும்    வேதியர்கள்     வணங்குதற்கு
உரியவனுமாகிய   இறைவன்; இராமன்   என்னும்  நல் அறமூர்த்தி
என்னின்
 -  இராமன்  என்கின்ற  நல்ல  தரும மூர்த்தியே  என்பது
உண்மையாயின்; ’பிறை   எயிற்று  இவனைக் கோறி’ என்று,  ஒரு
பிறைவாய்   வாளி
  -   பிறைச்   சந்திரனைப்  போன்ற கோரைப்
பல்லினையுடைய  இந்த  இந்திரசித்தனைக்  கொல்வாயாக,  என்று ஒரு
பிறைவாய்  அம்பினைத்; நிறை உற வாங்கிவிட்டான்  உலகு எலாம்
நிறுத்தி  நின்றான்
 -  தன்  வலிமை  முழுவதும்  பொருந்தவில்லில்
தொடுத்து  விட்டான்;  அதனால்  இலக்குவன்   உலகு  முழுவதையும்
அரக்கரால்   அழிவு   எய்தாதவாறு    நிறுத்தித்   தானும்  புகழுடன்
அவ்வுலகம் உள்ளவும் நின்றவனாயினான்.
 

இராம    நாமத்தை முன்னிறுத்தி இந்திரசித்தனைக் கொன்றவாறாம்.
இராம  நாமத்தின் சிறப்பையும், இந்திரசித்தனின்  வலிமையையும்  ஒரு
சேரவிளக்கியதாம். இராவணாதி அரக்கரின் முழு ஆற்றலின்  வடிவமாக
விளங்கியவன்  இந்திரசித்தன்.  இந்த   வல்லமையை   வென்றழிக்கவே
பரம் பொருள் கால் நிலந்தோய  மண்மிசை  நடந்தனன்.  இராவணனின்
வல்லமையின்  -  வெற்றியின்  அமிசமாக  விளங்கிய  இவ்விந்திரசித்து
வீழ்ச்சியின்  பின் இராவண வதம் என்பது  ஒரு  சம்பவமே.  இவனைக்
காட்டிலும்   இறைவனின   திருநாமம்    பக்தனுக்கு    வல்லமையைக்
கொடுக்குமென்பர்.    அவ்வகையில்    இராமனுஜனாகிய   இலக்குவன்
இராமநாமத்தை   உச்சரித்து  அம்பெய்து   இராவணியைக்  கொல்வது
நினைக்கற்பாலது.   ‘உலகெலாம்    நிறுத்தி   நின்றான்’    என்பதற்கு,
‘உலகத்தை   சுமந்து   கொண்டு   நின்றவனாகிய    ஆதி  சேடனின்
அமிசமாகிய இலக்குவன்’ எனப் பொருள் கூறலுமாம்.
 

                                                 (51)
 

9167.நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூ மழை அமரர் சிந்த, பொலிந்தது-அப் பகழிப் புத்தேள்.