பக்கம் எண் :

906யுத்த காண்டம் 

அப்பகழிப்புத்தேள்    -  (இலக்குவன்  விடுத்த)  அவ்  அம்புத்
தெய்வம்;  நேமியும்,  குலிசவேலும்  - (திருமாலின்) சக்கரப்படையும்,
(இந்திரனின்)   வச்சிரப்படையும்;    நெருப்புக்   கண்ணான்   நாம
வேல்தானும்
- நெற்றியில் நெருப்புக் கண்ணை  உடைய உருத்திரனின்
அஞ்சத்தக்க  சூலவேலும்;  மற்றை  நான் முகன் படையும் நாண -
எஞ்சியுள்ள  பிரமனுடைய  பிரமாத்திரமும் நாணுமாறு;  தீமுகம் கதுவ
ஓடிச்சென்று  அவன்  சிரத்தைத்தள்ளி
- நெருப்பு முனையில் பற்றி
எரியும்   படியாக  ஓடிச்  சென்று   அந்த  இந்திரசித்தின்  தலையை
அறுத்துத்   தள்ளிவிட்டு; அமரர்  பூமழை  சிந்த,  பொலிந்தது  -
தேவர்கள் மலர்மாரி சொரிய விளங்கிற்று.
 

                                                 (52)
 

9168.அற்றவன் தலைமீது ஓங்கி, அண்டம் உற்று அணுகாமுன்னம்,
பற்றிய சூலத்தோடும், உடல் நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றால், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை.
 

அற்றவன்   தலை   மீது   ஓங்கி  அண்டம்  உற்று அணுகா
முன்னம்
-   (இலக்குவனது   அம்பினால்)   அறுபட்ட   வலியதலை,
மேலே உயர்ந்து சென்று  விண்  முகட்டை  முட்டி  விட்டுத்  தரையை
அணுகுதற்கு   முன்னமே;     காலக்காற்றில்    எற்றிய    சுற்றிய
புயல்
- வீசிய  ஊழிக்காற்றினால்  தாக்குண்டு  சுற்றிக்   கொண்டிருந்த
மேகம்; மின்னொடும் இடியினோடும் வீழ்ந்தென்ன -  மின்னலோடும்
இடியினோடும்  தரையில்   வீழ்ந்தாற்போல; சோரன்யாக்கை  பற்றிய
சூலத்தோடும், உடன் நிறை  பகழியோடும் வீழ்ந்தது
- கள்வனாகிய
இந்திரசித்தன்  உடம்பு,   ஒரு   கையிற் பற்றிய சூலத்தோடும் தன்பால்
ஒருங்கே நிறைந்த அம்புகளோடும் (தரையில்) வீழ்ந்தது.
 

                                                 (53)
 

9169.விண்தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும், மின்னு வீசும்
குண்டலத் துணைகளோடும், கொந்தளக் குஞ்சிச் செங் கேழ்ச்