பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 907

சண்ட வெங் கதிரின் கற்றைத் தழையொடும், இரவிதான்
                                           அம்
மண்டலம் வீழ்ந்தது என்ன, வீழ்ந்தது, தலையும் மண்மேல்.

 

விண்தலத்து  இலங்கு  திங்கள்  இரண்டொடும்  -  வானத்தில்
விளங்கும்     இரு     பிறை     மதிகளோடும்; மின்னு     வீசும்
குண்டலத்துணைகளோடும்   
   -     ஒளி     வீசுகின்ற     இரு
குண்டலங்களோடும்; கொந்தளக்  குஞ்சிச்   செங்கேழ்ச்     சண்ட
வெங்கதிரின்   கற்றைத்  தழையொடும்
   -  சுருண்ட  குடுமியாகிய
செந்நிறத்தையுடைய   கொடிய   வெப்பமான    கதிர்களின்   தாழ்ந்த
கற்றையோடும்; இரவிதான் அம்மண்டலம் வீழ்ந்தது என்ன - சூரியன்
தான் அம்மண்தலத்தில் வீழ்ந்தது  என்று  எண்ணுமாறு; தலையும் மண்
மேல்  வீழ்ந்தது
- இந்திரசித்தின்  தலையும் (இருகோரப் பற்களோடும்
குண்டலங்களோடும்,  செம்பட்டை  மயிர்க்குடுமியோடும்)  மண் மேல்
விழுந்தது.
 

‘சூரியன்     திங்களிரண்டொடு  வீழ்ந்தது   போன்றது’  என்றது
இல்பொருளுவமையும்,   தற்குறிப்பேற்றமுமாம்.   கொந்தளக்குஞ்சி  -
சுருண்ட குடுமி.
 

                                                 (54)
 

9170.உயிர் புறத்து உற்ற காலை, உள் நின்ற உணர்வினோடும்,
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமாபோல்,
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார்.

 

உயிர்புறத்து உற்ற காலை உள் நின்ற உணர்வினோடும் - உயிர்
உடம்பிலிருந்து   புறத்தே  சென்றதும்,   (இதற்கு  முன்)   உள்ளிருந்த
உணர்வும்; செயிர் அறு பொறியும் அந்தக் கரணமும் சிந்துமாபோல்
- குற்றமற்ற  ஐம்பொறிகளும்,  மனம்  முதலிய  அந்தக்  கரணங்களும்
அழிவது போல; அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி
- கூர்மையான   பற்களையுடைய   அரக்கராக   உள்ளவர்   எல்லாம்
(இந்திரசித்து  இறந்தவுடன்)  ஒன்றும்  செய்ய இயலாதவராய்; படையும்
விட்டார் ஆன்ற எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர்
-