| இந்திரசித்து வதைப் படலம் | 909 |
9172. | வரம் தரு முதல்வன், மற்றை மான் மறிக் கரத்து வள்ளல் புரந்தரன், முதல்வர் ஆய நான்மறைப் புலவர், பாரில் நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர் கரந்திலர்; அவரை யாக்கை கண்டன, குரங்கும் கண்ணால். | வருந்தரு முதல்வன் மற்றை மான்மறிக்கரத்து வள்ளல் - வரங்களைத் தருகின்ற முதற்கடவுளாகிய திருமாலும், மற்றும் மான்குட்டியைக் கையிற்கொண்ட வள்ளலாகிய சிவனும்; புரந்தரன், முதல்வர் ஆய நான் மறைப்புலவர் - இந்திரன், இவர்களைத் தலைவர்களாகக் கொண்ட நான்கு மறைகளையும் அறிந்த தேவர்கள், (ஆகியோர்); பாரில் நிரந்தரம் தோன்றி நின்றார்- பூமியில் வந்து நிரந்தரமாகத் தோற்றம் அளித்து நின்றார்கள்; அருளினால் நிறைந்த நெஞ்சர் கரந்திலர் அவரை - அருளினால் நிறைந்த நெஞ்சர் ஆதலினால் அவர்தம் உருவை மறைக்காமல் நின்றனர்; குரங்கும் கண்ணால் யாக்கை கண்டன-குரங்குகளும் தம் கண்களால் அவர்தம் உடம்பைக் கண்டன. | (57) | 9173. | ‘அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு’ எனும் அறிஞர் வார்த்தை சிறந்தது-சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி, பறந்தலைஅதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல, இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த. | ‘அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு’ எனும் அறிஞர் வார்த்தை சிறந்தது - ‘அறவழியில் நின்றவர்க்கு இல்லை அழிவு’ என்ற அறிஞரின் மொழி (உண்மையாய்ச்) சிறப்புற்றது; (எங்ஙனம் எனின்?) சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி - அம்புகள் பாய்ந்ததனால் சிதறப்பெற்ற தலையினவாகி; புறந்தலை அதனில் மற்று அப்பாதக அரக்கன் கொல்ல - போர்க்களத்தில் அந்தப் பாதக அரக்கனாகிய இந்திரசித்தினால் கொல்லப்பட்டு; இறந்தன கவிகள் எல்லாம் இமையோர் ஏத்த எழுந்தன- இறந்தனவாகிய |
|
|
|