செய்தானோ; விரைந்து அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி - அப்படி விரைந்து இந் நிலத்தில் (நீ) செய்யப்படுவாய்; ஐயப்படல் தெரிந்தனெனால் - (அது பற்றி) சந்தேகப்படாதே (அதை நான்) தெரிவித்து விட்டேன் |
சையப்படிவம் - மலை போன்ற வடிவம். மெய் எப்படிச் செய்தனன் - கால்களையும் கைகளையும் தலையையும் வெட்டி முண்டமாகச் செய்த நிலை. இப்படியில் - இப்பூமியில். ஆல் - அசை. |
(50) |
| 7777. | ‘"கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா நின்றானொடு நின்றது என், தேடி?" எனின், தன் தாதை படும் துயர், தந்தையை முன் வென்றானை இயற்றுறும் வேட்கையினால். |
கொன்றான் ஒழிய - (கும்பகருணனைக்) கொன்றவனாகிய (இராமனை) விட்டு; கொலை கோள் அறியா நின்றானொடு - அக்கொலைச் செயலைச் செய்து அறியாது நின்றவனாகிய (இலக்குவனை); தேடி நின்றது என் எனின் - (இந்த அதிகாயன்) தேடிப் (போரிட) நிற்பது எற்றுக்கு எனின்; தன் தாதை படும் துயர் - (அதிகாயனாகிய) தன்னைப் பெற்ற இராவணன் படும் துன்பத்தை; தந்தையை முன் வென்றானை - (சிறிய) தந்தையாகிய கும்பகருணனை முன்பு வென்றவனாகிய இராமனுக்கு; இயற்றுறும் வேட்கையினால் - உண்டாக்கும் ஆசையினால்; |
தேடி - தேடி. தன் தாதை - அதிகாயனாகிய தன்னைப் பெற்ற தந்தையாகிய இராவணன், தந்தை, சிறிய தந்தையாகிய கும்பகருணன். கொலை கோள் - கொலைத் தொழிலைச் செய்தல். |
(51) |
| 7778. | வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று ஏனோர்களும், இவ் உரை கேண்மின; இவன்- தானே பொருவான்; அயலே தமர் வந்து ஆனோரும் உடன் பொருவான், அமைவான். |
வானோர்களும் - வானில் உள்ள தேவர்களும்; மண்ணினுளோர்களும் - நிலவுலகில் உள்ளவர்களும்; மற்று ஏனோர்களும் - மற்றும் உள்ள பிறரும்; இவ் உரை கேண்மின் - இந்தச் சொல்லைக் கேளுங்கள்; இவன் தானே பொருவான் - இந்த அதிகாயன் தானே (இலக்குவனுடன்) போரிடுவான்; அயலே தமர் வந்து ஆனோரும் |