குரங்குகள் எல்லாம் இமையவர்கள் வாழ்த்தியதனால் உயிர் பெற்று எழுந்தன (ஆகலின் என்க). | (58) | இந்திரசித்தின் தலையை ஏத்தி, அங்கதன் முன் செல்ல இலக்குவன் பின் செல்லுதல் | 9174. | ஆக்கையின்நின்று வீழ்ந்த அரக்கன்தன் தலையை அம் கை தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல, மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் இளவல் போனான். | ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் தன் தலையை -உடம்பில் நின்று அறுபட்டு விழுந்த இந்திரசித்தின் தலையை; உள்ளம் கூர்ந்த வாலி சேய் அம்கை தூக்கினன் தூசி செல்ல - மனமகிழ்ச்சி மிக்க வாலியின் மகனான அங்கதன் அகங்கையில் தூக்கிக் கொண்டு முன்னணியில் செல்லா நிற்க; மேக்குயர்ந்து அமரர் வெள்ளம் - விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் திரள்;அள்ளியே தொடர்ந்து வீசும் பூக்கிளர் பந்தர் நீழல் - அள்ளினவாய்த் தொடர்ந்து சொரிகின்ற மலர்களின் கிளர்ச்சி மிக்க பந்தல் நிழலில்; இளவல் அனுமன் மேல் போனான் - இலக்குவன் அனுமன் தோள் மேலனாய்ப் போனான் | (59) | 9175. | வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன், மீதுற்று ஓங்கிய முடியன், திங்கள் ஒளி பெறு முகத்தன், உள்ளால் வாங்கிய துயரன், மீப் போய் வளர்கின்ற புகழன், வந்துற்று ஓங்கிய உவகையாளன், இந்திரன், உரைப்பதானான்; | இந்திரன் வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன் - (அக்காட்சியைக் கண்ட) இந்திரன் பூரித்த தோள்களையுடையவனாய், தனக்கிருந்த பழி தேய்ந்து மெலியப் பெற்றவனாய்; |
|
|
|