| இந்திரசித்து வதைப் படலம் | 911 |
மீதுற்று ஓங்கிய முடியன் திங்கள் ஒளிபெறும் முகத்தான் - மேலே நிமிர்ந்த முடியை உடையவனாய்ச் சந்திரனைப் போல ஒளி பெற்ற முகத்தை உடையவனாய்; உள்ளால் வாங்கிய துயரன் மீப்போய் வளர்கின்ற புகழன் - உள்ளத்திருந்த துயரம் வாங்கப் பெற்றவனாய், மேலே சென்று வளர்கின்ற புகழை உடையவனாய்; வந்துற்று ஓங்கிய உவகையாளன் உரைக்கலுற்றான் - புதிதாக வந்து பொருந்தி உயர்ந்துள்ள மகிழ்ச்சியுடைவனாய்ச் சொல்லத் தொடங்கினான். | (60) | 9176. | ‘“எல்லி வான் மதியின் உற்ற கறை என, என் மேல் வந்து புல்லிய வடுவும் போகாது” என்று அகம் புலம்புகின்றேன், வில்லியர் ஒருவர் நல்க, துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்; செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனி, சிறுமை யாதோ? | “எல்லிவான் மதியின் உற்றகறை என - ‘இரவில் விளங்கும் வெள்ளிய சந்திரனிடத்துப் பொருந்தியகளங்கம் போல; என்மேல் வந்து புல்லிய வடுவும் போகாது“ என்று அகம் புலம்புகின்றேன்- என்மேல் வந்து பொருந்தியுள்ள பழியும் நீங்காது போலும்” என்று மனம் புலம்புகின்ற யான்; வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன் - (இப்போது) வில் வீரராகிய ஒருவர் அருளியதால் அந்த வடுதுடைக்கப்பெற்று இதுகாறும் இருந்த என் வெறுமைத் தன்னையும் தீர்ந்தேன்; செல்வமும் பெறுதற்கு உண்டோகுறை? இனி, சிறுமையாதோ? - இனி என் அரசச்செல்வத்தையும் பெறுதற்குக் குறையேதும் உண்டோ? இனிச் சிறுமைதான்யாதுளது? | (61) | 9177. | தென்தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன செம்மல், வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த் தொழில் கடந்த வெய்யோன், |
|
|
|