பக்கம் எண் :

912யுத்த காண்டம் 

தன் தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பென்’
                                     என்றான்.
 

தென்தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல்
- அழகிய   இடத்தை  உடைய  கடலைத் தோண்டின  சகரபுத்திரரின்
வழித்தோன்றலாகிய   இராமபிரானின் அருளைப்  பெற்ற  சிறுவனான
செம்மைக்  குணம் வாய்ந்த அங்கதன்; என்னை  வென்று அலைத்து
ஆர்த்து  போர்த்தொழில் கடந்த வெய்யோன்
- என்னை வென்று
வருத்திக்கட்டிப்  போர்த் தொழிலில்   வெற்றிபெற்ற  கொடியவனாகிய;
தன்தலை எடுப்பக் கண்டு தானவர் தலைகள் சாய -இந்திரசித்தினது
தலையை    எடுப்பக்   கண்டு,   அசுரர்கள்   தலைகள்  அச்சத்தால
சாயுமாறு;  என்தலை  எடுக்கலானேன்  இனிக்  குடை எடுப்பேன்
என்றான்
   -  என்னுடைய     தலையைத்  தூக்கிப்பார்க்கலானேன;
இனி  என் வெண்கொற்றக்  குடையையும் எடுப்பேன்’ என்று கூறினான்.
 

                                                  (62)
 

9178.வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், ‘மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க’ என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதம் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிசு
                                      பார்த்தான்.

 

வரதன், போய்  மறுகா  நின்ற  மனத்தினன்  - வரந்தரத்தக்க
பெருமையனாகிய     இராமன்     மிகவும்    கலங்கிய    மனத்தை
உடையவனாய்; தருமமே  தாங்க  மாயத்தோனைச்   சரதம் போர்
வென்று   மீளும்   என்பான்
  - ‘தருமமே  துணைநின்று  தாங்க
மாயத்தவனாகிய  இந்திரசித்தனைப்  போரில்  வென்று   (இலக்குவன்)
நிச்சயமாகத்   திரும்புவான்’   என்று   எண்ணுகின்றவனாய்;  விரதம்
பூண்டு,  உயிரினோடும்  தன்னுடை மீட்சி நோக்கும்
- விரதத்தை
மேற்கொண்டு  உயிரைத்தாங்கியவனாய் தனது மீட்சியை எதிர் நோக்கி
இருக்கும்; பரதன்    போன்று,  தம்பிவருகின்ற  பரிசுபார்த்தான்
இருந்தான்
- பரதனைப் போன்று,