இராமன் திருவடிகளில் இந்திரசித்தின் தலையை வைக்க, அவன் களிப்புக் கொள்ளுதல் | 9180. | விழுந்து அழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க, எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்- கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, எயிற்றின் கூட்டம் அழுந்துற, மடித்த பேழ் வாய்த் தலை அடியறை ஒன்று ஆக, | விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க - கண்களிலிருந்து விழுந்து அழிகின்ற கண்ணீரும், மகிழ்ச்சியும், களிப்பும் பெருக; எழுந்து எதிர் வந்த வீரன் இணையடி முன்னர் - எழுந்து எதிர் வந்த இராமனுடைய இரு திருவடிகட்கு முன்னர்; கொழுந்து எழும் செக்கர்க்கற்றை வெயில் விட - ஒளிக்கொழுந்து எழுகின்ற செவ்வானம் போன்ற செம்பட்டை மயிர்க்கற்றை வெயில் வீசாநிற்க; எயிற்றின் கூட்டம் அழுந்துறமடிந்த பேழ்வாய்த் தலை - பற்களின் கூட்டம் அழுந்துமாறு மடித்துள்ள பிளந்த வாயையுடைய இந்திரச்சித்தின் தலையை; அடியுறை ஒன்று ஆக இட்டான் - ஓர் அடியுறைப் பொருளாக வைத்தான். | (65) | 9181. | தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்; சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்பு கொண்டான். | களிப்புக் கொண்டான் ஒன்றும் உரைத்திலன் - (தன் அடியுறையைக் கண்டு) களிப்புக்கொண்டவனாகிய இராமன் ஒன்றும் பேசாதவனாய்; தலையினை நோக்கும் - தன் முன் வைக்கப்பட்டுள்ள இந்திரசித்தன் தலையினை நோக்குவான்; தம்பி கொற்றவை தழீஇய பொன்தோள் மலையினை நோக்கும் - பின்பு (அத்தலைய வீழ்த்திய) தம்பியின் வெற்றத்திருதழுவிய அழகிய |
|
|
|