பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 915

தோளாகிய     மலையினை    நோக்குவான்; நின்ற மாருதி  வலியை
நோக்கும்
  -   பின்பு  அவனுக்கு  ஊர்தியாக  இருந்த   அனுமனது
வலிமையை நோக்குவான்; சிலையினை நோக்கும்; தேவர்  செய்கையை
நோக்கும்
 -  பின்பு  (இலக்குவன் கையிலுள்ள) வில்லின்   சிறப்பினை
நோக்குவான்  (இந்திரசித்தன்  வீழ்ச்சிகண்டு தூசு வீசி   ஆரவாரிக்கும்)
தேவர்களுடைய   செயல்களை  நோக்குவான்; செய்த  கொலையினை
நோக்கும்
 - (அங்ஙனம் தேவர்களும் மகிழுமாறு)   இலக்குவன் செய்த
கொலையின் சிறப்பை நோக்குவான்.
 

உவகை     மிகுந்ததால்  பேச்சுத்   தோன்றாது என்பார். “களிப்புக்
கொண்டான்  ஒன்றும்  உரைத்திலன்”   என்றார். வெற்றி பெற்ற தோள்
ஆதலின், ‘கொற்றவை தழீஇய பொற்றோள்’ எனச் சிறப்பிக்கப்பட்டது.
 

                                                (66)
 

9182

காள மேகத்தைச் செக்கர் கலந்தென, கரிய குன்றில்
நாள் வெயில் பரந்தது என்ன, நம்பிதன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில்
                                      தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று
                                        இல்லான்.
 

தனித்து ஒன்றில்லான் நம்பி- (இலக்குவனை யன்றித்  தனக்கெனத்)
தனித்து  ஒன்றும்  இல்லாதவனாகிய  இராமன்; தன்  தம்பி  மார்பில்
தோளின் மேல் உதிரச் செங்கேழ்ச்  சுவடு தன் உருவில்
-தன் தம்பி
இலக்குவன்    மார்பிலும்    தோளின்   மேலும்   இருந்த  குருதியின்
செந்நிறமுடைய  சுவடுகள்  தன் உருவத்தில்; காளமேகத்தைச் செக்கர்
கலந்தென
- கரிய   மேகத்தைச்  செவ்வானம்     கலந்தாற்போலவும்;
கரியகுன்றில்   நாள்வெயில்   பரந்து என்ன தோன்ற-     கரிய
குன்றத்தில்      காலை     வெயில்       பரவியது       போலவும்
தோன்றுமாறு; தாளின் மேல்  வணங்கினானைத்  தழுவினான் - தன்
திருவிடி மேல் வணங்கிய அத்தம்பியைத் தழுவிக் கொண்டான்.
 

இன்ப     துன்பங்களில்  இலக்குவனையன்றித்  தனக்கென ஒன்றும்
இல்லாதவன்   இராமன்   என்பதனை  “தனித்து  ஒன்றில்லான் நம்பி”
எனக்